புகாட்டி வேரான் காருக்கு மாற்றாக வரவுள்ள புகாட்டி சிரோன் காரின் ஆற்றல் விபரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.  புகாட்டி சிரோன் காரின் வேகம் மணிக்கு 500கிமீ ஆக இருக்கலாம்.

புகாட்டி சிரோன்

தூபாயில் நடந்த சில குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்காக நடந்த அறிமுகத்தின் பொழுது தெரிவிக்கப்பட்ட முக்கிய விபரங்கள் ஆன்லைனில் வெளியாகியுள்ளது.

வேரான் காரில் பொருத்தப்பட்டிருந்த அதே W16 8 லிட்டர் என்ஜினே சிரான் காரிலும் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் முந்தைய மாடலை விட 300பிஎஸ் ஆற்றல் வரை கூடுதலாக வெளிப்படுத்தி 1500 பிஎஸ் ஆற்றலை தரவுள்ளதாம். மேலும் இதன் டார்க் 1500என்எம் ஆகும். இதில் 7 வேக டியூவல் கிளட்ச் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.

0 முதல் 100 கிமீ வேகத்தினை புகாட்டி சிரோன் ஹைப்பர் கார் வெறும் 2.3 விநாடிகளில் எட்டிவிடும். 0 முதல் 300 கிமீ வேகத்தினை எட்டுவதற்க்கு வெறும் 15 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும். மேலும் இதன் புகாட்டி சிரோன் காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 500கிமீ ஆகும்.

மேலும் முன்பக்கத்தில் 20 இஞ்ச் வீலும் பின்புறத்தில் 21 இஞ்ச் வீலும் பெற்றிருக்கும். இதில் மிச்செலின் பைலட் ஸ்போர்ட் PAX டயர்கள் பொருத்தப்பட்டிருக்கும்.  முன்பக்க டிஸ்க் 420மிமீ மற்றும் பின்பக்க டிஸ்க் 400மிமீ விட்டத்தினை பெற்றிருக்கும். இதுதவிர புகாட்டி சிரோன் காரின் என்ஜினை குளிர்விக்க 15 ரேடியேட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளதாம்.

புகாட்டி சிரோன்

500 புகாட்டி சிரோன் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ள நிலையில் இதுவரை 120 கார்களுக்கு முன்பதிவு நடந்துள்ளதாம். வரும் 2016 மார்ச்  ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் அதிகார்வப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.

புகாட்டி சிரோன்

Bugatti Chiron supercar engine details

source