பிரான்ஸ் நாட்டின் பிஎஸ்ஏ குழுமத்தின் அங்கமான பீஜோ சிட்ரோவன் கார் நிறுவனம் மீண்டும் இந்தியாவின் சிகே பிர்லா குழுமத்துடன் இணைந்து கார் மற்றும் எஞ்சின்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. பீஜோ நிறுவனம் 2001ம் ஆண்டில் இந்திய சந்தையிலிருந்து வெளியேறியது.
 

 

பியூஜியெட் சிட்ரியன்

பீஜோ நிறுவனம் கடந்த 4 வருடங்களாகவே இந்திய சந்தையில் நுழைவதற்க்காக பல கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. சனந்த் தொழிற்பேட்டையில் புதிய ஆலை கட்டுமானத்தை தொடங்கி பீஜோ நிறுவனத்தின் தொடர் நஷ்டத்தால் இந்த ஆலை திட்டத்தை கைவிட்டது.

ரூ.700 கோடி முதலீட்டில் தமிழகத்தில் பிஎஸ்ஏ குழுமம் சி.கே பிர்லா குழுமத்தின் கூட்டணியில் கார் மற்றும் எஞ்சின்களை தயாரிக்க உள்ளது.  சிகே பிர்லா நிறுவனம் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தின் உரிமையாளராக உள்ளது. திருவள்ளுவரில் அமைந்துள்ள ஹிந்துஸ்தான் ஆலையில் இசுசூ எம்யூ7 எஸ்யூவிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றது. இதே ஆலையில் பியூஜியோட் சிட்ரியன் கார்களும் தயாரிக்கப்பட உள்ளது.
முதல் ஒப்பந்ததின் அடிப்படையில் இந்துஸ்தான் மோட்டார் ஃபைனான்ஸ் கார்ப்பரேசன் மற்றும்  வாகனங்களை தயாரித்து விற்பனை செய்யும் உரிமையை பிஎஸ்ஏ இந்திய பயணிகள் கார் பிரிவு மேற்கொள்ளும்.
இரண்டாவது ஒப்பந்ததின் அடிப்படையில்  பிஎஸ்ஏ குழுமம் மற்றும் AVTEC  (சி.கே பிர்லா அங்கம்) இணைந்து தமிழகத்தில் எஞ்சின் தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஆண்டுக்கு 1 லட்சம் வாகனங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ள பிஎஸ்ஏ படிப்படியாக உற்பத்தியை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது. மேலும் உள்நாட்டிலே பெரும்பாலான பாகங்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளதால் மிக சவலான விலையிலே கார்கள் விற்பனைக்கு வரவுள்ளது. இந்தியாவில் பீஜோ கார்கள் 2021 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.