W601 என்ற குறியீட்டு பெயரில் தயாரிக்கப்பட்டு வந்த மாடலின் பெயரை மஹிந்திரா XUV700 என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முன்பாக விற்பனையில் உள்ள XUV500 மாடலுக்கு மாற்றாக பல்வேறு பிரீமியம் வசதிகளை பெற்றதாக விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.
புத்தம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மஹிந்திரா நிறுவனத்தின் பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள எக்ஸ்யூவி700 மாடலில் அறிவியல் சார்ந்த பல்வேறு நவீனத்துவமான நுட்பங்கள் இடம்பெற்றிருக்கும் என தனது முதல் டீசரில் உறுதிப்படுத்தியுள்ளது.
விற்பனைக்கு வரவுள்ள இந்த புதிய எஸ்யூவி மஹிந்திரா நிறுவன சக்கன் ஆலையில் உற்பத்தி செய்யப்பட உள்ள நிலையில் ஸ்மார்ட் டெக்னாலாஜி சார்ந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை வழங்க உள்ளது. இந்த சிஸ்டத்தில் இணையத்தினை சார்ந்த பல்வேறு அம்சங்கள் உள்ளடக்கியதாக இருக்க வாய்ப்புள்ளது.
அனேகமாக விற்பனையில் உள்ள எக்ஸ்யூவி500 தற்போதைய தலைமுறை தொடர்ந்து விற்பனை எய்யப்படுவதுடன் கூடுதலாக எக்ஸ்யூவி 700 நிலை நிறுத்தப்பட வாய்ப்புகள் உள்ளது.
இன்ஜின் ஆப்ஷனை பொறுத்தவரை, தற்போது கிடைத்து வருகின்ற இன்ஜினில் மேம்படுத்தப்பட்டு கூடுதல் பவர் மற்றும் டார்க் பெற்றிருக்க வாய்ப்புகள் உள்ளது. 2.2 லிட்டர் (eVGT), mHawk டீசல் என்ஜின் அதிகபட்சமாக 153 ஹெச்பி பவர் மற்றும் 360 என்எம் டார்க் வெளிப்படுத்த உள்ளது இதில் 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் என இரு விதமான கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்க உள்ளது.