பாதுகாப்பான சொகுசு கார்களை வடிவமைப்பதில் முன்னணி வகிக்கும் ஸ்விடன் நாட்டின் வால்வோ கார் நிறுவனம் பெங்களூரு அருகே அமைந்துள்ள ஆலையில் முதன்முறையாக வால்வோ XC90 மாடலை ஒருங்கிணைத்து உற்பத்தியை தொடங்கியது.
வால்வோ கார்
இந்திய சந்தையில் வால்வோ கார் பிரிவு நுழைந்து 11 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், முதன்முறையாக இந்தியாவில் டீசல் ரக வால்வோ எக்ஸ்சி90 எஸ்யூவி மாடல்களை உற்பத்தியை தொடங்கியுள்ளது.
பெங்களூருவில் அமைந்துள்ள வால்வோ குழுமத்தின் டிரக், பஸ், கட்டுமான கருவிகள்மற்றும் பென்டா எஞ்சின் ஆகியவற்றை தயாரிக்கும் பிரிவில் வால்வோ ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் கீழ் SPA பிளாட்பாரத்தில் உள்ள மாடல்கள் மட்டுமே இந்தியாவில் ஆரம்ப கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட உள்ளது.
தற்போது எக்ஸ்சி 90 டீசல் ரக மாடல் அசெம்பிளிங் செய்ய தொடங்கியுள்ள நிலையில், விரைவில் S90 மற்றும் விற்பனைக்கு வரவுள்ள XC60 ஆகிய மாடல்களும் இந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளது.
தற்போது இந்திய சொகுசு கார் சந்தையில் 5 % பங்களிப்பை பெற்றுள்ள வால்வோ நிறுவனம் வருகின்ற 2020 ஆம் ஆண்டிற்குள் 10 % பங்களிப்பாக உயர்த்த திட்டமிட்டு வருகின்றது.