ஏப்ரல் 14ல் இந்திய சந்தைக்கு வரவிருக்கும் புதிய டிகுவான் R-line எஸ்யூவி காரில் 9 ஏர்பேக்குகள், 21 விதமான பாதுகாப்பு சார்ந்த Level-2 ADAS உட்பட தானியங்கி முறையில் பார்க்கிங் வசதி என பலவற்றை கொண்டு EURO 5 நட்சத்திர கிராஷ் டெஸ்ட் மதிப்பீட்டை பெற்றதாக விளங்குகின்றது.
VW Tiguan R-line
பாதுகாப்பு, பெர்ஃபாமென்ஸ் மட்டுமல்லாமல் பல்வேறு ஆடம்பரமான வசதிகளை கொண்டுள்ள VW டிகுவான் ஆர்-லைனில் 19 அங்குல கான்வென்ட்ரி டைமண்ட் அலாய் வீல் உடன் பக்கவாட்டில் ஆர்-லைன் பேட்ஜ், முன்புற பம்பர் பகுதியின் மேற்பகுதியில் உள்ள ஸ்டிரிப் பட்டையில் ஆர்-லைன் லோகோ பெற்று மிக நேர்த்தியான முன்புற கிரில் என கவர்ச்சிகரமான தோற்றத்துடன், பின்புறத்தில் பம்பரில் கிரில் போன்ற அமைப்பு, எல்இடி லைட்டுகளை கொண்ட டெயில் விளக்கினை கொண்டுள்ளது.
உயர்தரமான இன்டீரியர் பாகங்களை பெற்று மசாஜ் செய்யும் வசதியுடன் கூடிய ஸ்போர்ட்டிவ் இருக்கைகள் கொண்டு டேஸ்போர்டில் 10.3 அங்குல டிஜிட்டல் கிளஸ்ட்டருடன், 12.3 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளை பெற்றதாக அமைந்திருக்கும் என கூறப்பட்டுள்ளது.
கூடுதலாக, பனரோமிக் சன்ரூஃப், மூன்று மண்டல காலநிலை கட்டுப்பாடு, இரண்டு தொலைபேசிகளுக்கு வயர்லெஸ் சார்ஜிங், 30 விதமான வண்ணத்தை சுற்றுப்புற விளக்குகள், ஒளிரும் கதவு கைப்பிடிகளுக்கான இன்டீரியர், பிரஷ் செய்யப்பட்ட ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பெடல்கள், வெல்கம் லைட் ஆகியவற்றை பெற்றுள்ளது.
பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் பின்புற பக்கவாட்டு ஏர்பேக்குகள் உட்பட 9 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் கண்காணிப்பு வசதி, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும் ஹில் டிசென்ட் கண்ட்ரோல்., முன் மற்றும் பின்புற டிஸ்க் பிரேக்குகளை பெற்று 21 விதமான Level 2 ADAS மூலம் பெறப்பட்ட பாதுகாப்பில் அடாப்ட்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், லேன் அசிஸ்ட், மோதலை தடுக்கும் வசதி என பலவற்றை பெற்றுள்ளது.
204hp மற்றும் 320Nm டார்க் வெளிப்படுத்தும் 2.0-லிட்டர் நான்கு சிலிண்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் 7-ஸ்பீடு டூயல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றதாக அமைந்திருக்கும். இந்த காரில் 4Motion AWD சிஸ்டம் பெற்றிருக்கும். மேலும், அதிகபட்ச வேகம் மணிக்கு 229 கிமீ ஆக வெளிப்படுத்தலாம்.
தற்பொழுது ஃபோக்ஸ்வேகனின் டீலர்கள் மற்றும் ஆன்லைனில் முன்பதிவு நடைபெறும் நிலையில் டிகுவான் ஆர்-லைன் விலை ரூ.45 லட்சத்தில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.