இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள ஃபோக்ஸ்வாகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் எஸ்யூவி முந்தைய 5 இருக்கைக்கு மாற்றாக 7 இருக்கைகளை கொண்டதாக விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.
தோற்ற அமைப்பினை பொறுத்தவரை முந்தைய டிகுவான் 5 இருக்கை மாடலை போலேவே அமைந்திருந்தாலும் கூடுதலாக 110 மீமீ வரை நீட்டிக்கப்பட்டு வீல்பேஸ் மறும் 215 மிமீ வரை அதிகரிக்கப்பட்ட நீளத்தைப் பெற்ற இந்த மாடல் தற்போது 7 இருக்கை பெற்றதாக முழுமையான வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்து விற்பனைக்கு வெளியிடப்படுகின்றது.
முழுமையான எல்இடி ஹெட்லைட் உடன் இடம்பெற்றுள்ள எல்இடி ரன்னிங் விளக்குகள், பனரோமிக் சன்ரூஃப், லெதர் இருக்கைகள், தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் என பல்வேறு வசதிகளை கொண்டிருக்கின்றது.
விற்பனைக்கு வரவுள்ள 7 இருக்கை ஃபோக்ஸ்வாகன் ஆல்ஸ்பேஸ் மாடலில் 190 ஹெச்பி பவரை வழங்கும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 143 ஹெச்பி பவரை வழங்கும் 2.0 லிட்டர் டீசல் என்ஜினும் இடம்பெற உள்ளது. பாதுகாப்பு சார்ந்த அம்சங்களை பொறுத்தவரை ஏழு ஏர்பேக்கு, ஏபிஎஸ், இஎஸ்பி, டயர் பிரஷர் மானிட்டர் மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா ஆகியவை கொண்டுள்ளது.
முன்பாக விற்பனை செய்யப்பட்ட 5 இருக்கை கொண்ட ஃபோக்ஸ்வாகன் டிகுவான் ரூ.28 லட்சத்தில் துவங்கிய நிலையில் தற்போது வரவுள்ள புதிய மாடல் ஆல்ஸ்பேஸ் ரூ.32 லட்சத்தில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த கார் விற்பனைக்கு மார்ச் 6 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.