கூடுதலான சில வசதிகள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட தோற்றத்துடன் 2019 வோக்ஸ்வேகன் போலோ மற்றும் வோக்ஸ்வேகன் வென்டோ என இரு மாடல்களும் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. என்ஜின் பவர் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இல்லை.
வோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம், தொடர்ந்து பெரிதாக எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்து வந்த போலோ மற்றும் வென்டோ கார்களில் தற்போது தோற்றத்தில் சில குறிப்பிடதக்க மாற்றங்களை செய்துள்ளது. புதிதாக சன்செட் ரெட் என்ற நிறத்துடன் இரு மாடல்களிலும் ஜிடி வேரியண்டுகள் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக GTI வரிசை மாடல்களின் உந்துதலை பெற்றதாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
போலோ காரில் 76 ஹெச்பி பவர் மற்றும் 95 என்எம் டார்க் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மைலேஜ் லிட்டருக்கு 18.78 கிமீ ஆகும். அடுத்ததாக, 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பொருதப்பட்டு அதிகபட்சமாக 90 ஹெச்பி பவர் மற்றும் 230 என்எம் டார்க் வெளிப்படுத்துகிறது. இரண்டு மாடலிலும் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
போலோ ஜிடி காரில் 105 ஹெச்பி பவர் மற்றும் 175 என்எம் டார்க் வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் TSI பெட்ரோல் என்ஜினில் 7 வேக டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் மற்றும் 110 ஹெச்பி பவர் மற்றும் 250 என்எம் டார்க் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் TDI டீசல் என்ஜின் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸை பெற்றுள்ளது.
வென்ட்டோ காரில் தொடர்ந்து நான்கு என்ஜின்கள் வழங்கப்படுகின்றது. 105 ஹெச்பி வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் மாடலில் 5 வேக மேனுவல், 105 ஹெச்பி பவர் மற்றும் 175 என்எம் டார்க் வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் TSI பெட்ரோல் என்ஜினில் 7 வேக டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் மற்றும் 110 ஹெச்பி பவர் மற்றும் 250 என்எம் டார்க் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் TDI டீசல் என்ஜின் 5 வேக மேனுவல் மற்றும் 7 வேக டிஎஸ்ஜி கியர்பாக்ஸை பெற்றுள்ளது.
வோக்ஸ்வாகன் போலோ மற்றும் வென்டோ இரண்டுமே இப்போது தேன்கூடு தோற்ற கிரில், முன் பம்பர் மற்றும் டெயில் லைட்களில் மாற்றத்தைப் பெற்றுள்ளன. இது வோக்ஸ்வாகன் போலோ ஜிடிஐ ஹாட் ஹேட்ச்பேக்கில் இருந்து பெறப்பட்டதாகும். புதிய போலோ மற்றும் வென்டோவின் டாப் மாடல்களில் கன்மெட்டல் ஃபினிஷ் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.
பல்வேறு கனெக்ட் சார்ந்த வசதிகளை வழங்க வோக்ஸ்வேகன் கனெக்ட் வசதி இன்டிரியரில் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட்போனை இணைத்துக் கொள்ளலாம். மற்றபடி இன்டிரியரில் பெரிய மாற்றங்கள் இல்லை.
பெட்ரோல் வேரியண்டுகள்
2019 Polo – ரூ. 5.82 லட்சம் முதல் ரூ. 7.76 லட்சம்
2019 Polo GT – ரூ. 9.76 லட்சம்
2019 Vento – ரூ. 8.76 லட்சம் முதல் ரூ. 13.17 லட்சம்
2019 Vento GT Line – ரூ. 13.17 லட்சம்
டீசல் வேரியண்டுகள்
2019 Polo – ரூ. 7.34 லட்சம் முதல் ரூ. 9.31 லட்சம்
2019 Polo GT – ரூ. 9.88 லட்சம்
2019 Vento – ரூ. 9.58 லட்சம் முதல் ரூ.14.5 லட்சம்
2019 Vento GT Line – ரூ. 14.5 லட்சம்
(எக்ஸ்ஷோரும் இந்தியா)