ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் போலோ TSI மற்றும் வென்ட்டோ TSI கார்களில் டர்போ எடிசன் என்ற பெயரில் கம்ஃபோர்ட் லைன் TSI MT வேரியண்டின் அடிப்படையிலான மாடலை வெளியிட்டுள்ளது.
மிகவும் சக்திவாய்ந்த 1.0 லிட்டர் TSI டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 110 ஹெச்பி மற்றும் 175 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதன் போலோ டி.எஸ்.ஐ மைலேஜ் லிட்டருக்கு 18.24 கிமீ, செடான் ரக வென்ட்டோ டி.எஸ்.ஐ மைலேஜ் லிட்டருக்கு 17.69 கிமீ ஆகும்.
சாதாரண போலோ மற்றும் வென்ட்டோ கம்ஃபோர்ட் லைன் வேரியண்ட்டை விட கூடுதலாக ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், முன்புற மற்றும் பின்புற பனி விளக்குகள், பின்புற டீஃபோகர் மற்றும் வைப்பர், ரிமோட் சென்டரல் லாக்கிங், 15 அங்குல அலாய் வீல், ஓட்டுநர் இருக்கை அட்ஜெஸ்ட்மென்ட், டில்ட் மற்றும் டெலிஸ்கோபிக் ஸ்டீயரிங், ரியர் பார்சல் டிரே, கூல்டு க்ளோவ் பாக்ஸ், ஆம்பியன்ட் லைட்டிங் 2 டின் ப்ளூடூத் இணைப்புடன் கூடிய ஆடியோ சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.
டர்போ பேட்ஜ் ஃபென்டரில் இணைக்கப்பட்டு இருக்கை கருப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது.
Polo Turbo edition ரூ. 6.99 லட்சம்
Vento Turbo edition ரூ. 8.69 லட்சம்
(ex-showroom)