ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற போலோ மற்றும் வென்டோ என இரு கார்களின் விலையை ஜனவரி 2021 முதல் 2.5 % வரை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.
தொடர்ந்து அதிகரித்து வரும் உற்பத்தி மூலப் பொருட்களின் விலை உயர்வினால் நாட்டின் மாருதி சுசூகி உட்பட ரெனால்ட், கியா, பிஎம்டபிள்யூ, மஹிந்திரா, டாடா, நிசான் என பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் விலை உயர்வை அறிவித்துள்ள நிலையில் ஃபோக்ஸ்வேகனும் இணைந்துள்ளது.
குறிப்பாக இந்தியாவில் தயாரிக்கப்படுகின்ற போலோ மற்றும் வென்டோ என இரு மாடல்கள் மட்டுமே உயர்த்தப்பட உள்ளது. மற்றபடி, இறக்குமதி செய்யப்படுகின்ற டிகுவான் ஆல் ஸ்பேஸ் மற்றும் டி-ராக் எஸ்யூவிகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
இந்நிறுவனம் 2021 ஆம் ஆண்டில் புதிய ஃபோக்ஸ்வேகன் டைகன் எஸ்யூவி காரை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.