மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் மேபெக் ஆடம்பர பிராண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட விஷன் மெர்சிடிஸ் மேபெக் 6 கான்செப்ட் மாடல் இந்தியாவில் முதன்முறையாக மும்பையில் உள்ள நிதா முகேஷ் அம்பானி கலாச்சார மையத்தில் அடுத்த சில மாதங்களுக்கு காட்சிக்கு வைக்கப்பட உள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு முதண்முறையாக மேபெக் விஷன் 6 கான்செப்ட் காட்சிக்கு வந்த நிலையில் பல்வேறு மோட்டார் ஷோக்களில் காட்சிக்கு வைக்கப்பட்டு, தற்பொழுது இந்தியாவிற்கும் வந்துள்ளது.
Vision Mercedes-Maybach 6 concept
இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம், ஜனவரி-செப்டம்பர் 2023 காலகட்டத்தில் இந்திய சந்தையில் 12,768 புதிய கார்களை விற்பனை செய்துள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பீடுகையில் 11% வளர்ச்சி பெற்றுள்ளது.
மேலும், சமீபத்தில் மெர்சிடிஸ்-பென்ஸ் அறிமுகம் செய்திருந்த 4 கோடி விலையுள்ள ஏஎம்ஜி G63 கிராண்ட் எடிசன் 6 நிமிடங்களில் 25 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
மேபெக் விஷன் 6 கான்செப்ட் மாடலில் உள்ள 80kWh லித்தியம் அயன் பேட்டரி மூலம் நான்கு மின்சார மோட்டார் கொண்டு அதிகபட்சமாக 750hp பவர் வெளிப்படுத்துகின்றது. இந்த விஷன் 6 கான்செப்ட் ஐரோப்பிய சோதனை நடைமுறையின் அடிப்படையில் சிங்கிள் சார்ஜ் மூலம் 500கிமீ ரேஞ்சு வழங்கும் என மெர்சிடிஸ் தெரிவித்துள்ளது.
மேபக் 6 கான்செப்டில் மிக நீளமான பானெட் , நேர்த்தியான முகப்பு பம்பருடன் செங்குத்தான கிரிலுடன் மெர்சிடிஸ் நிறுவனத்தின் பாரம்பரிய 3 பாயின்ட் கொண்ட மெர்சிடிஸ் லோகோ , எல்இடி முகப்பு விளக்கு , பக்கவாட்டில் கதவு கைப்பிடிகள் மேற்கூரைக்கு கீழாக அமைந்துள்ளது , 24 இன்ச் அலாய் வீல் பின்புறத்தில் எல்இடி டெயில் விளக்கு பெற்றுள்ளது.
உட்புறத்தில் விஷன் மேபக் 6 மாடலில் 360 டிகிரி கோணத்திலான வசதிகளுடன் நேர்த்தியான டேஸ்போர்டு , தன்னாட்சி காராகவும் , மெனுவல் டிரைவுக்கு ஏற்ற வகையில் மாறிக்கொள்ளும் டேஸ்போர்டு என அசத்தலாக விளங்குகின்றது.