டாடா மோட்டார்சின் 2025 ஆம் ஆண்டிற்கான புதிய டியாகோ மற்றும் டியாகோ இவி என இரண்டும் (Tata Tiago) பல்வேறு மாற்றங்களுடன் கூடுதல் வசதிகளுடன் சிங்கிள் பேன் சன்ரூஃப் பல்வேறு கனெக்ட்டிவிட்டி கொண்டிருப்பதுடன் மேம்பட்ட பாதுகாப்பான வசதிகளை பெற்றுள்ளது.
டியாகோ விற்பனைக்கு வரும்பொழுது இந்தியாவின் குறைந்த விலையில் சன்ரூஃப் பெறும் மாடலாக டியாகோ விளங்க உள்ளது.
புதிய மாடலில் எஞ்சின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இருக்காது, தொடர்ந்து டியாகோ காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் மாடல் 6000 rpm-ல் 86hp மற்றும் 3300 rpm-ல் 113Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. சிஎன்ஜி ஆப்ஷனில் 6000 rpm-ல் 77hp மற்றும் 3500 rpm-ல் 97Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இந்த காரில் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.
முன்புறத்தில் சிறிய அளவிலான கிரில் மாற்றத்துடன் புராஜெக்டர் எல்இடி ஹெட்லைட், எல்இடி ரன்னிங் விளக்குடன், புதிய டிசைனில் டெயில் லைட் பெற்று, பக்கவாட்டில் புதுப்பிக்கப்பட்ட டிசைன் கொண்ட 15 அங்குல அலாய் வீல் பெற்று சார்க் ஃபின் ஆண்டனா, சிங்கிள் பேன் சன்ரூஃப், புதுப்பிக்கப்பட்ட கிளஸ்ட்டருடன் கனெக்ட்டவிட்டி சார்ந்த அம்சங்களுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது.
கூடுதலாக புதிய நிறங்கள் பெற உள்ள 2025 டியாகோ மாடலுக்கு போட்டியாக ஸ்விஃப்ட், கிராண்ட் ஐ10 உட்பட மற்ற சிறிய ரக வேகன் ஆர், செலிரியோ போன்றவற்றையும் எதிர்கொள்ள உள்ளது.
வரும் ஜனவரி 17 ஆம் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள டியாகோ விலை பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் தெரியவரும், கூடுதலாக டிகோர் காரின் விலையும் அறவிக்கப்படலாம்.