ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் பிரபலமான வெனியூ, வெர்னா மற்றும் கிராண்ட் i10 நியோஸ் என மூன்று மாடல்களிலும் கூடுதலான வசதி அல்லது கூடுதலான வேரியண்ட் சேர்க்கப்பட்டிருக்கின்றது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் விருப்பமான மாடலை தேர்ந்தெடுக்க சற்று கூடுதல் அம்சங்கள் கிடைக்கின்றது.
புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 1.2 l MPi பெட்ரோல் SX Executive MT வேரியண்டில், முக்கிய வசதிகளாக எலக்ட்ரிக் சன் ரூஃப், 8 அங்குல இன்ஃபோடையின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் கார் பிளே, ஸ்மார்ட் கீ உடன் ஸ்டார்ட் பட்டன், ஆட்டோமேட்டிக் டெம்பரேச்சர் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் இடம் பெற்றுள்ளன.
Variant | Price (ex-showroom) |
Venue Kappa 1.2 litre MPi Petrol S MT | Rs 9,28,000 |
Venue Kappa 1.2 litre MPi Petrol S+ MT | Rs 9,53,000 |
Venue Kappa 1.2 litre MPi Petrol S(O) MT | Rs 9,99,900 |
Venue Kappa 1.2 litre MPi Petrol S(O) Knight MT | Rs 10,34,500 |
Venue Kappa 1.2 litre MPi Petrol S(O)+ Adventure MT | Rs 10,36,700 |
Venue Kappa 1.2 litre MPi Petrol SX Executive MT | Rs 10,79,300 |
அடுத்து பிரசத்தி பெற்ற செடான் ரக வெர்னாவில் புதிதாக 1.5 l டர்போ GDi பெட்ரோல் S(O)DCT எலக்ட்ரிக் சன் ரூஃப், 8 அங்குல இன்ஃபோடையின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் கார் பிளே, ஸ்மார்ட் கீ உடன் ஸ்டார்ட் பட்டன், ஆட்டோமேட்டிக் டெம்பரேச்சர் கண்ட்ரோல், 16 அங்குல கருப்பு அலாய் வீல், சிவப்பு நிற பிரேக் காலிப்பர், மற்றும் ரியர் கேமராவுடன் டைனமிக் கோடுகள் உள்ளன.
1.5 l MPi பெட்ரோல் S IVT மூலம் முன்பாக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் எனப்படுகின்ற iVT வழங்கப்பட்டு எலக்ட்ரிக் சன்ரூஃப், டிரைவ் மோடு மற்றும் பெடல் ஷிஃப்ட் உள்ளது.
மேலும், 1.5 l MPi பெட்ரோல் S MT இந்த வேரியண்டில் எலக்ட்ரிக் சன்ரூஃப் சேர்க்கப்பட்டுள்ளது.
Variant | Price (ex-showroom) |
Verna 1.5 litre MPi Petrol S MT | Rs 12,37,400 |
Verna 1.5 litre MPi Petrol S iVT | Rs 13,62,400 |
Verna 1.5 litre Turbo GDi Petrol S(O) DCT | Rs 15,26,900 |
1.2 l கப்பா பெட்ரோல் Sports (O) புதிய வேரியண்டில் மேனுவல் மற்றும் ஏஎம்டி என இரண்டிலும் 8″ தொடுதிரை ஆடியோ சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே, முழு தானியங்கி வெப்பநிலை கட்டுப்பாடு (FATC), புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் உடன் கூடிய ஸ்மார்ட் கீ, R15 டயமண்ட் கட் அலாய் வீல்கள் மற்றும் குரோம் வெளிப்புற கதவு கைப்பிடிகள் மற்றும் பல வசதிகள் உள்ளன.
புதிய வேரியண்ட் தவிர கூடுதலாக கிராண்ட் ஐ10 நியோஸ் காரில் தற்பொழுது அனைத்து வேரியண்டிலும் ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப் ஆனது வழங்கப்பட்டிருக்கின்றது.
Variant | Price (ex-showroom) |
Grand i10 Nios Kappa 1.2 Litre Petrol Corporate MT | Rs 7,09,100 |
Grand i10 Nios Kappa 1.2 Litre Petrol Sportz (O) MT | Rs 7,72,300 |
Grand i10 Nios Kappa 1.2 Litre Petrol Corporate AMT | Rs 7,74,800 |
Grand i10 Nios Kappa 1.2 Litre Petrol Sportz (O) AMT | Rs 8,29,100 |
மேலும் ஒரு சில வேரியண்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது மற்றபடி எஞ்சின் ஆப்ஷனில் எந்த மாற்றங்களும் கிடையாது. ஹூண்டாய் இந்தியாவின் புதிய கிரெட்டா எலக்ட்ரிக் வருகின்ற ஜனவரி 17ஆம் தேதி விற்பனைக்கு வெளியாக உள்ளது.