Auto News

டாடா ஹாரியர் இவி QWD காரின் அறிமுகம் விபரம் வெளியானது

tata harrier ev qwd

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அடுத்த எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலாக வரவுள்ள ஹாரியர் இவி இந்நிறுவனத்தின் முதல் AWD அல்லது QWD நுட்பத்துடன் விற்பனைக்கு வருவது உறுதியாகயுள்ள நிலையில் ரேஞ்ச், தொழில்நுட்பங்கள் தொடர்பாக மற்ற விபரங்கள் தற்பொழது முழுமையாக வெளியிடப்படவில்லை.

சமீபத்தில் நடைபெற்ற பாரத் மொபிலிட்டி அரங்கில் ஸ்டெல்த் எடிசன் என்ற பெயரில் ஹாரியர் இவி மற்றும் சஃபாரி என இரு மாடல்களும் காட்சிப்படுத்தப்பட்ட நிலையில் ஆல் வீல் டிரைவ் நுட்பம் ஆனது QWD என அழைக்கப்படுகின்றது.

ஹாரியர் இவி பற்றி ஏற்கனவே வெளிவந்த தகவலின் அடிப்படையில் ATLAS (Adaptive Tech Forward Lifestyle Architecture) பிளாட்ஃபாரத்தில் குறைந்தபட்சம் 450 கிமீ ரேஞ்ச் முதல் அதிகபட்சமாக 600 கிமீ ரேஞ்ச் வரை வெளிப்படுத்தக்கூடியதாக அமையலாம்.

வழக்கமான டிரைவிங் மோடுகளுடன் ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற வகையிலான Snow, Gravel, Sand போன்றவற்றில் பயணிக்கின்ற வகையிலான 4×4 டெர்ரெயின் மோடுகள் இடம்பெற்றிருக்கும்.

மார்ச் 2025யில் விற்பனைக்கு வரும் பொழுது மஹிந்திரா XEV 9e, மாருதி இ விட்டாரா AWD, டொயோட்டா அர்பன் க்ரூஸர் எலெக்ட்ரிக் ஆகியவற்றை எதிர்கொள்ளும் வகையில் ரூ.20 லட்சம் விலையில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Share
Published by
BHP Raja