பூமியில் இருந்து நிலவுக்கு பயணித்து திரும்பிய தொலைவுக்கு இனையாக சுமார் 8,00,000 கிமீ சோதனை ஓட்டத்தின் மூலம் நிறைவு செய்துள்ளதாக ஸ்கோடா தெரிவித்துள்ள புதிய கைலாக் காம்பேக்ட் எஸ்யூவி வருகின்ற நவம்பர் 6ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு ஜனவரி 2025-ல் வெளியிடப்பட உள்ளது.
கடும் போட்டிகளுக்கு இடையே நான்கு மீட்டருக்கு குறைவான நீளம் கொண்ட சந்தைக்கான ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் சார்பாக இந்தியாவிலே உருவாக்கப்பட்ட MQB A0 IN பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கின்ற புதிய கைலாக் மாடலில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.
MQB A0 IN பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்ட மாடல்களான குஷாக், ஸ்லாவியா இதன் மற்ற மாடல்களான ஃபோக்ஸ்வேகன் விர்டஸ் மற்றும் டைகன் ஆகியவை ஏற்கெனவே விற்பனை செய்யப்பட்டு வருகின்ற நிலையில் கைலாக் தற்பொழுது தயாரிக்கப்பட்டுள்ளது.
115 PS மற்றும் 178 Nm டார்க் வெளிப்படுத்தும் 999சிசி டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஆறு வேக மேனுவல் மற்றும் ஆறு வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என இரண்டு விதமான ஆப்ஷனிலும் கிடைக்க உள்ளது.
3,995மிமீ நீளம், 2,566மிமீ வீல்பேஸ், மற்றும் 189மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்றுள்ள காரில் 17 அங்குல டூயல் டோன் டைமண்ட் கட் அலாய் வீல் பெற்றுள்ளது.
குஷாக் பிரீமியம் எஸ்யூவி மாடலில் இருந்து பெறப்பட்ட‘Modern Solid’ டிசைன் மொழியின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள கைலாக் காரின் முன்புறத்தில் மிக நேர்த்தியான பட்டாம்பூச்சி கிரில் அமைப்பு எல்இடி லைட் மற்றும் ரன்னிங் விளக்குகள் கொண்டிருக்கின்றது.
பக்கவாட்டில் 17 அங்குல வீல் உடன் ஸ்கிட் பிளேட் பெற்று மேற்கூரையில் ரூஃப் ரெயில் மற்றும் பின்புறத்தில் எல்இடி டெயில் லைட் கொண்டிருக்கும்.
இன்டீரியரில் காற்றோட்டமான முன்பக்க இருக்கைகள், அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கைகள், டேஸ்போர்டில் 10-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, சன்ரூஃப், 8 இன்ச் டிஜிட்டல் டிரைவருக்கான டிஸ்ப்ளே, கீலெஸ் என்ட்ரி மற்றும் தானியங்கி காலநிலை கட்டுப்பாடு ஆகியவை பெற்றிருக்கும்.
கைலாக் காரில் அடிப்படையான பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் 6 ஏர்பேக்குகள், EBD உடன் ABS, டயர் அழுத்தம் கண்காணிப்பு அமைப்பு (TPMS), மின்னணு நிலைத்தன்மை கட்டுப்பாடு (ESC) மற்றும் ஹில்-ஹோல்ட் அசிஸ்ட் ஆகியவற்றை எதிர்பார்க்கலாம்.
ஸ்கோடாவின் கைலாக் மாடலுக்கு போட்டியாக மஹிந்திரா XUV 3XO, டாடா நெக்ஸான், மாருதி சுசூகி பிரெஸ்ஸா, கியா சொனெட், ஹூண்டாய் வெனியூ, மாருதி ஃபிரான்க்ஸ், ரெனால்ட் கிகர், நிசான் மேக்னைட் மற்றும் சிட்ரோன் ஏர்கிராஸ் உள்ளிட்ட பல்வேறு மாடல்களை ரூ.7.50 லட்சம் முதல் ரூ12 லட்சம் விலைக்குள் உள்ளவற்றை எதிர்கொள்ள உள்ளது.