அடுத்த 2025-2026 நிதியாண்டின் இறுதிக்குள் இந்திய சந்தையில் நிசான் நிறுவனம் குறைந்த விலை எலெக்ட்ரிக் கார் உட்பட 4 கார்களை வெளியிட திட்டமிட்டுள்ளது. முதலில் மேக்னைட் எஸ்யூவி, டஸ்ட்டர் அடிப்படையிலான எஸ்யூவி, 7 இருக்கை டஸ்ட்டர் எஸ்யூவி, மற்றும் ஒரு எலக்ட்ரிக் எஸ்யூவி என நான்கு மாடல்கள் வெளியிடப்பட உள்ளது.
10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நிசான் நிறுவனம் எக்ஸ்-ட்ரெயில் எஸ்யூவி மாடலை இந்திய சந்தையில் வெளியிடுகின்றது.
Nissan Magnite 2024
முதலில் விற்பனைக்கு வரவுள்ள 2024 மேக்னைட் எஸ்யூவி ஃபேஸ்லிஃப்ட் சிறிய அளவிலான டிசைன் மாற்றங்கள் மற்றும் கூடுதலான சில வசதிகளை பெறப்படும் மற்றபடி எஞ்சின் ஆப்ஷனில் எந்த ஒரு மாற்றங்களும் இருக்காது. இந்திய சந்தையில் தற்பொழுது இந்த மாடலானது இந்நிறுவனத்திற்கு ஒரு நம்பகமான மாடலாகவும் தொடர்ந்து மாதம் தோறும் 2500க்கும் கூடுதலான விற்பனை எண்ணிக்கை பதிவு செய்து வருகின்றது.
நடப்பாண்டின் இறுதி அல்லது அடுத்த ஆண்டின் துவக்க மாதங்களில் சந்தைக்கு வரவுள்ளது. ரூபாய் ஆறு லட்சத்தில் தொடங்குமா அல்லது சற்று கூடுதலான விலையில் தொடங்கும் என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
C-SUV and C-SUV+
CMF-B பிளாட்ஃபாரத்தில் வரவுள்ள ரெனால்ட் டஸ்ட்டரை எஸ்யூவி 2025 ஆம் ஆண்டின் மத்தியில் எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதனை தொடர்ந்து டஸ்ட்டரின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட மாடல் ஆனது முற்றிலும் மாறுபட்ட நிசானின் மாடலானது. 5 இருக்கை மற்றும் 7 இருக்கை என இரண்டு விதமான ஆப்ஷனிலும் விற்பனைக்கு வரவுள்ளது.
Affordable Nissan EV
2025 ஆம் ஆண்டின் இறுதி அல்லது 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ள குறைந்த விலை எலெக்ட்ரிக் காரின் ரூபாய் 10 லட்சத்தில் துவங்கலாம். அனேகமாக 250-300 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும் வாய்ப்புகள் உள்ளது.
Nissan Ariya EV
முழுமையாக இறக்குமதி செய்யப்ட்ட (CBU) உள்ள மாடல்களின் வர நிசான் ஆரியா எலக்ட்ரிக் மாடல் இந்திய சந்தைக்கு வரக்கூடும்.
ஆரியா எலெக்ட்ரிக் காரில் சிங்கிள் மோட்டார், ரியர் வீல் டிரைவ் மற்றும் இரட்டை மோட்டார் பெற்ற நான்கு வீல் டிரைவ் பவர்டிரெய்ன்களுடன் 63kWh மற்றும் 87kWh என இரண்டு பேட்டரி பேக் விருப்பங்களுடன் சர்வதேச சந்தையில் கிடைக்கின்றது.
63kWh பேட்டரி பேக் 217hp மற்றும் 300Nm டார்க்கை உருவாக்குகிறது மற்றும் 402km ரேஞ்ச் கொண்டுள்ளது. 87kWh மாடல் 242hp மற்றும் 300Nm மற்றும் 529km வரை ரேஞ்ச் கொண்டுள்ளது. டாப்-ஸ்பெக் 87kWh ஆரியா 306hp மற்றும் 600Nm டார்க் வெளிப்படுத்தும் அதே நேரத்தில் 513km வரை ரேஞ்ச் கோரப்பட்ட வரம்பை வழங்குகிறது.