Home Car News 200kmph வேகத்தில் XUV.e9, XUV.e8, மற்றும் BE.05 பயணிக்கு டீசரை வெளியிட்ட மஹிந்திரா

200kmph வேகத்தில் XUV.e9, XUV.e8, மற்றும் BE.05 பயணிக்கு டீசரை வெளியிட்ட மஹிந்திரா

by MR.Durai

xuv.e teased

மஹிந்திரா நிறுவனத்தின் வரவிருக்கும் எலக்ட்ரிக் எஸ்யூவி மாடல்களில் XUV.e9, XUV.e8, மற்றும் BE.05 ஆகிய மூன்று மாடல்களும் மணிக்கு 200 கிமீ வேகத்தை எட்டும் என உறுதிப்படுத்தும் வகையிலான டீசரை வெளியிட்டுள்ளது.

சென்னையில் உள்ள தனது ஆராய்ச்சி மையத்தில் உள்ள டிராக்கில் மின்சார எஸ்யூவி சோதனை ஓட்டத்தின் மூலம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

Mahindra XUV.e9, XUV.e8, BE.05

சமீபத்தில் மஹிந்திரா தார்.இ மற்றும் ஸ்கார்ப்பியோ பிக்கப் டிரக் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து தற்பொழுது மிக தீவரமாக BE மற்றும் XUV.e வரிசை மாடலைகளை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தி வருகின்றது.

டிசம்பர் 2024-ல் முதல் மாடலாக INGLO பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட உள்ள XUV.e8 எஸ்யூவி மாடல் 450கிமீ முதல் 500 கிமீ ரேஞ்சு வழங்கும் வகையில் வரக்கூடும். விற்பனையில் உள்ள XUV700 எஸ்யூவி காரை அடிப்படையில் வடிவமைக்கப்பட உள்ளது.

ஏப்ரல் 2025 விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற XUV.e9 மாடல் 500 கிமீ ரேஞ்சுக்கு கூடுதலாக வெளிப்படுத்தலாம்.

Born Electric என பெயரிடப்பட்டுள்ள பிராண்டில் வரவிருக்கும்  BE05 எஸ்யூவி கார் 4370 மீ நீளம், 1900 மீ அகலம் மற்றும் 1635 மீ உயரம், 2775 மீ வீல்பேஸ் கொண்டதாக இருக்கும். மஹிந்திரா பிஇ.05 விற்பனைக்கு 2025 அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என மஹிந்திரா அறிவித்துள்ளது.

You may also like