கியா இந்தியா நிறுவனத்தின் அடுத்த எஸ்யூவி அல்லது எம்பிவி ரக மாடலா என தெரியவில்லை வெளியிடப்பட்டுள்ள டீசரில் மிக அகலமான பாக்ஸ் டிசைனை போல அமைந்திருக்கின்றது. இந்த மாடலின் பெயர் கிளாவிஸ் அல்லது சிரோஸ் என இரண்டில் ஒன்றாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வரவிருக்கும் எஸ்யூவி மாடல் ஏற்கனேவே கியா நிறுவனம் விற்பனை செய்து வருகின்ற பிரபலமான எலக்ட்ரிக் EV9 மாடலின் தோற்ற உந்துதலை தழுவியதாக அமைந்திருக்கின்றது. குறிப்பாக பக்கவாட்டு தோற்றம் மட்டுமே தரப்படுத்த டீசராக வெளியிடப்பட்டிருக்கின்றது இதில் மிக ஸ்டைலிஷ் ஆன மற்றும் எவ்விதமான கோடுகளும் இல்லாமல் ஒரு பினிஷ்டு மாடலாக காட்சிக்கு தெரிகின்றது.
பின்புறத்தில் எல் வடிவ எல்இடி விளக்குகள் கொடுக்கப்பட்டிருக்கின்றது முன் வடிவத்திலும் நமக்கு எல் வடிவ புரொஜெக்டர் எல்இடி விளக்குகள் கொடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்த மாடலை பொறுத்த வரை ஒரு உயரமான மற்றும் சற்று பெரிய தோற்றத்தை வெளிப்படுத்தக்கூடிய எஸ்யூவி ஆக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இன்டீரியர் தொடர்பாக எந்த ஒரு படங்களும் தற்பொழுது டீசராக வெளியிடப்படவில்லை, என்றாலும் இந்த காரில் பல்வேறு நவீனத்துவமான பாதுகாப்பு வசதிகளான ADAS, 360 டிகிரி கேமரா, 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் உட்பட சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜர் மற்றும் பல்வேறு கனெக்டிவிட்டி சார்ந்த அம்சங்களுடன் கூடுதலாக வரக்கூடும்.
தற்போது விற்பனையில் உள்ள கியா செல்டோஸ் மற்றும் சொனெட் இரண்டு கார்களுக்கும் மத்தியில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள இந்த மாடல் ரூபாய் 10 லட்சத்தில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.