மஹிந்திரா நிறுவனம் பயணிகள் வாகனப் பிரிவில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் XUV.e8, XUV.e9, BE.05, BE Rall-E மற்றும் BE.07 என 5 எலக்ட்ரிக் எஸ்யூவி மாடல்களை விற்பனைக்கு வெளியிட திட்டமிட்டுள்ளது.
தற்பொழுது மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி 400 எலக்ட்ரிக் காரை விற்பனை செய்து வரும் நிலையில் INGLO பிளாட்ஃபாரத்தில் முதல் XUV.e8 மாடல் டிசம்பர் 2024-ல் அறிமுகம் செய்ய மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.
பயணிகள் மின்சார வாகனப் பிரிவில் முன்னணி நிறுவனமான மஹிந்திரா எலக்ட்ரிக் ஆட்டோமொபைல் லிமிடெட் (MEAL), உலகளாவிய முதலீட்டு நிறுவனமான Temasek ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட முதலீட்டு நிறுவனமானது கணிசமான me.1200 கோடி ரூபாய், EV பிரிவில் இந்த முதலீடு கட்டாய மாற்றத்தக்க முன்னுரிமை பங்குகள் (CCPS) வடிவத்தில் உள்ளது.
MEAL மதிப்பு ரூ. 80,580 கோடி ஆகும். இதன் மூலம் மஹிந்திரா மின்சார வாகனப் பிரிவு நிறுவனத்தில் Temasek பங்களிப்பு தோராயமாக 1.49 சதவிகிதம் முதல் 2.97 சதவிகிதம் பங்குகளை வழங்குகிறது.
வரும் டிசம்பர் 2024-ல் முதல் மாடலாக INGLO பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட உள்ள XUV.e8 எஸ்யூவி மாடல் 450கிமீ முதல் 500 கிமீ ரேஞ்சு வழங்கும் வகையில் வரக்கூடும். விற்பனையில் உள்ள XUV700 எஸ்யூவி காரை அடிப்படையில் வடிவமைக்கப்பட உள்ளது.
XUV.e8 காரின் பரிமாணங்கள் 4,740 மிமீ நீளம், 1,900 மிமீ அகலம் மற்றும் 1,760 மிமீ உயரம். இது 2,762 மிமீ வீல்பேஸ் கொண்டிருக்கும். அதாவது XUV.e8 ஆனது XUV700 காரை விட 45mm நீளமும், 10mm அகலமும் மற்றும் 5mm உயரமும் இருக்கும், அதே சமயம் வீல்பேஸ் வெறும் 7mm நீளமாக இருக்கும். ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் பேட்டரி பேக் 80kWh வரை இருக்கும். பவர் 230hp முதல் 350hp வரை இருக்கும்.
ஏப்ரல் 2025 விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற XUV.e9 தற்போதுள்ள எந்த பெட்ரோல் மாடலுக்கும் எலெக்ட்ரிக் இணை அல்ல, ஆனால் கூபே போன்ற வடிவமைப்புடன் முற்றிலும் புதிய வாகனமாக XUV.e9 பரிமாணங்கள் 4,790 மிமீ நீளம், 1,905 மிமீ அகலம் மற்றும் 1,690 மிமீ உயரம் என மஹிந்திரா வெளிப்படுத்தியுள்ளது.
XUV.e9 மாடல் 5 இருக்கைகள் கொண்ட மாடல் 2,775 மிமீ வீல்பேஸைக் கொண்டிருக்கும். இந்த மாடலும் INGLO பிளாட்ஃபாரத்திலே வரவுள்ளதால் 500 கிமீ-க்கு கூடுதலான ரேஞ்சு வெளிப்படுத்தலாம்.
Born Electric என பெயரிடப்பட்டுள்ள பிராண்டில் வரவிருக்கும் BE05 எஸ்யூவி கார் 4370 மீ நீளம், 1900 மீ அகலம் மற்றும் 1635 மீ உயரம், 2775 மீ வீல்பேஸ் கொண்டதாக இருக்கும். இதனை ஸ்போர்ட்ஸ் எலெக்ட்ரிக் வாகனம் (Sports Electric Vehicle- SEV) என மஹிந்திரா & மஹிந்திரா கூறுகிறது.
மஹிந்திரா பிஇ.05 விற்பனைக்கு 2025 அக்டோபர் மாதம் வெளியிடப்படும்.
2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் விற்பனைக்கு வரவிருக்கும் BE Rall-e ஆனது INGLO பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காரில் 80kWh வரை திறன் கொண்ட மிக நீண்ட தொலைவு பயணிக்கும் பேட்டரி ஆப்ஷனுடன் சுமார் 450km ரேஞ்சு பெற்றிருக்கும். இது தவிர 175kW வரை வேகமாக சார்ஜ் செய்யும் திறனையும் கொண்டிருக்கும்.
4565 மீ நீளம், 1900 மீ அகலம் மற்றும் 1660 மீ உயரம் மற்றும் BE.05 வீல்பேஸ் 2775 மீ இருக்கும். இது மூன்று வரிசை இருக்கை கொண்ட குடும்பங்களுக்கு ஏற்ற எஸ்யூவி ஆக இருக்கும், இது நீண்ட தூர பயணத்திற்காக வடிவமைக்கப்பட உள்ளதால் 600 கிமீ க்கு கூடுதலான ரேஞ்சு பெற்றிருக்கலாம்.
அக்டோபர் 2026-ல் விற்பனைக்கு பிஇ.07 வரக்கூடும்.