3 டோர் தார் எஸ்யூவி காரை தொடர்ந்து வரவுள்ள 5 டோர் பெற்ற தார் அர்மடா எஸ்யூவி என்ற பெயர் உட்பட 7 பெயர்களை காப்புரிமை கோரி மஹிந்திரா நிறுவனம் பதிவு செய்துள்ளது. 2024 ஆம் ஆண்டின் மத்தியில் 5 கதவுகளை பெற்ற மாடல் விற்பனைக்கு வரவுள்ளது.
தொடர்ந்து சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்ற 5 கதவுகளை பெற்ற தார் மிக தாராளமான இடவசதியை கொண்டதாக முழுமையான ஆஃப் ரோடு அனுபவத்தை வழங்குவதாக அமைந்திருக்கும்.
Mahindra Thar Armada
தார் என துவங்கும் வகையில் தார் அர்மடா, தார் கல்ட், தார் ரெக்ஸ், தார் சவன்னா, தார் ராக்ஸ், தார் கிளாடியஸ் மற்றும் தார் செஞ்சுரியன் என 7 பெயர்களுக்கு காப்புரிமை பெற்றுள்ளது.
1990களில் பிரசத்தி பெற்ற மாடலாக விளங்கிய மஹிந்திரா அர்மடா என்ற பெயரை மீண்டும் 5 கதவுகளை கொண்ட தார் மாடலுக்கு அர்மடா என பெயரிட வாய்ப்புகள் உள்ளதாக கருதுகின்றோம்.
5 கதவுகளை பெற உள்ள தார் அர்மடா எஸ்யூவி மாடலில் இடம்பெற உள்ள 2.0 லிட்டர் Mstallion பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 5000 RPMல் 150hp பவர் மற்றும் 1500-3000rpm-ல் 320 Nm டார்க் (ஆட்டோமேட்டிக்) மற்றும் 1250-3000rpm-ல் 300 Nm டார்க் (மேனுவல்) வெளிப்படுத்தும். 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் என இரு விதமான ஆப்ஷனை பெறுகின்றது.
அதிகபட்சமாக 3750 RPM -ல் 130 hp பவர் மற்றும் 300 Nm டார்க் ஆனது 1600 – 2800 RPM -ல் வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் எம் ஹாக் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் என இரு விதமான ஆப்ஷனை பெறுகின்றது.
இன்டிரியரில் சிறிய அளவிலான மாற்றங்களை பெற்று 10.25 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெற்றதாக வரக்கூடும். புதிய மஹிந்திரா தார் அர்மடா எஸ்யூவி 2024 ஆம் ஆண்டின் மத்தியில் வெளியாகலாம்.