விற்பனையில் உள்ள ரெனோ க்விட், டாடா டியாகோ, டட்சன் ரெடி-கோ மற்றும் வரவுள்ள புதிய மாருதி ஆல்டோ ஆகிய மாடல்களுக்கு மிகுந்த சவாலினை ஏற்படுத்தும் வகையில் க்ராஸ்ஓவர் ரக கார்களை போன்ற தோற்ற அமைப்பில் 2018 ஹூண்டாய் சான்ட்ரோ கார் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
2018 ஹூண்டாய் சான்ட்ரோ
வரும் வருடத்தில் காம்பேக்ட் கார் சான்ட்ரோ மற்றும் காம்பேக்ட் எஸ்யூவி (கார்லினோ) என இரு மாடல்களை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ள ஹூண்டாய் நிறுவனம் , மீண்டும் பிரசத்தி பெற்ற சான்ட்ரோ பெயரில் விற்பனைக்கு கொண்டு வரலாம் என பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது. புதிய மாடல் க்ராஸ்ஓவர் கார்களை போன்ற தோற்ற அமைப்பினை பெற்றிருக்கும்.
ஹூண்டாயின் இயான் காருக்கு மேலாக விற்பனையில் உள்ள கிராண்ட் ஐ10 காருக்கு மாற்றாக அல்லது அதற்கு கீழாக நிலைநிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கின்ற இந்த காரில் 1.0 லிட்டர் எஞ்சின் தேர்வு பொருத்தப்பட்டு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன் இடம்பெறக்கூடும்.
2011 ஆம் ஆண்டு முதல் சந்தையில் புதுப்பிக்கப்படாமல் விற்பனை செய்யப்படுகின்ற இயான காரை நீக்கும் வாய்ப்புகளும் உள்ளது. எனவே அடுத்த ஆண்டில் நடைபெற உள்ள 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் கான்செப்ட் அல்லது உற்பத்தி நிலை மாடலை ஹூண்டாய் காட்சிப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.