உபேர் மற்றும் வால்வோ கூட்டணியில் உருவாகிவரும் தானியங்கி கார் நுட்பத்திற்கான சோதனை ஓட்ட முயற்சியில் அரிசோனா பகுதியில் உபேர் தானியங்கி கார் விபத்தில் சிக்கியுள்ள தகவல் உறுதியாகியுள்ளது.
உபேர் தானியங்கி கார் விபத்து
- தானியங்கி கார்களுக்கு என வால்வோ நிறுவனத்துடன் இணைந்து உபேர் செயல்படுகின்றது.
- எதிரே வந்த வாகனங்களின் மீது வால்வோ எஸ்யூவி கார் மோதி சாய்ந்துள்ளது.
- விபத்தில் யாரும் காயமடையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்கால மொபிலிட்டி தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் தானியங்கி முறையில் செயல்படும் கார்களை முதன்முறையாக கூகுள் வேமோ நிறுவனம் சோதிக்க தொடர்ந்தது. அதனை தொடர்ந்து ஜெர்மனி ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் , ஃபோர்டு , உபேர் போன்ற நிறுவனங்களும் , உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தயாரிப்பாளர்களும் தானியங்கி முறையில் இயங்கும் காருக்கான சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.
accident images- Fresco News
இதுகுறித்து உபேர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வந்த கார் விபத்தில் சிக்கியதில் விபத்தில் எவ்விதமான காயங்களும் யாருக்கும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தினை தொடர்ந்து தானியங்கி கார் சோதனையை தற்காலிகமாக உபேர் நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2016ல் டெஸ்லா நிறுவனத்தின் ஆட்டோ பைலட் வசதி கொண்ட மாடல் S கார் டிரக்குடன் மோதி ஏற்பட்ட விபத்தில் ஓட்டுநர் பலியானர் என்பது குறிப்பிடதக்கதாகும்.