டொயோட்டா நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற இன்னோவா க்ரீஸ்டா காரின் மேம்பட்ட மாடலின் அறிமுகம் நவம்பர் மாத மத்தியில் மேற்கொள்ளப்பட உள்ளது. தற்போது டீலர்கள் வாயிலாக புதிய இன்னோவா காருக்கு முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் கடந்த மாதம் வெளியிடப்பட்ட புதிய இன்னோவா காரின் அடிப்படையிலா மாற்றங்களை பெற்ற மாடல் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. தோற்ற அமைப்பு மற்றும் இன்டிரியர் வசதிகளில் மட்டும் புதுப்பிக்கப்பட்டு இன்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இல்லாமல் வரக்கூடும்.
இன்னோவா க்ரிஸ்டா ஃபேஸ்லிஃப்ட் எம்பிவி காரின் முகப்பில் முன்புற கிரில் அமைப்பு முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டு இப்போது 5 ஸ்லாட் கிரில் பெற்று வெளிப்புறத்தில் க்ரோம் பூச்சு பெற்றுள்ளது. அதே நேரத்தில் எல்இடி டிஆர்எல் கொடுக்கப்பட்டு ஹெட்லைட்டின் சில இடங்களில் க்ரோம் பூச்சு சேர்க்கப்பட்டுள்ளது. பின்புற அமைப்பில் பம்பர் மற்றும் டெயில் விளக்கு அறை சற்று புதுப்பிக்கப்பட்டிருக்கும்.
இன்டிரியரில் பெரிய அளவில் மாற்றங்கள் இல்லாமல், மேலும் 9.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இணைக்கப்பட்டு ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதிகளை பெற்றுள்ளது.
இந்தியாவில் டொயோட்டா இன்னோவா க்ரீஸ்டா காரில் பிஎஸ்-6 ஆதரவினை பெற்ற 2.7 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.4 லிட்டர் டீசல் என இரண்டிலும் கிடைக்க உள்ளது. 166 ஹெச்பி பவர் மற்றும் 245 என்எம் டார்க் வழங்கும் 2.7 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 150 ஹெச்பி பவர் மற்றும் 360 என்எம் டார்க் வழங்கும் 2.4 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
இரண்டிலும் 5 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் ஆப்ஷனில் கிடைக்கின்றது.
தற்போது விற்பனையில் உள்ள டொயோட்டா இன்னோவா க்ரீஸ்டா காரை விட அதிகபட்சமாக ரூ.50,000 வரை விலை உயர்த்தப்படலாம். நவம்பர் 15 ஆம் தேதிக்கு பிறகு விற்பனைக்கு வெளியிட வாய்ப்புகள் உள்ளது.
web title : 2021 Toyota Innova Crysta facelift india launch soon