டொயோட்டா நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற ஃபார்ச்சூனர் எஸ்யூவி காரில் ஸ்போர்ட்டிவ் அம்சங்கள் இணைக்கப்பட்டு ஃபார்ச்சூனர் TRD லிமிடெட் எடிசன் ரூ.34.98 லட்சம் விலையில் 4X2 வேரியண்டும், 4X4 வேரியண்ட் விலை ரூ.36.88 லட்சம் ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. இது சாதாரன மாடலை விட ரூ.2.45 லட்சம் வரை கூடுதலாக அமைந்துள்ளது.
கடந்த 2019 இறுதியில் வெளியிடப்பட்ட டி.ஆர்.டி செலிபிரேட்டரி எடிசன் மாடலை போன்ற தோற்ற அமைப்பில் அமைந்திருக்கின்ற புதிய TRD லிமிடெட் எடிசனில் கூடுதலான சில வசதிகளும் இணைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வெள்ளை நிறத்தில் வந்துள்ள இந்த காரில் கருப்பு நிற மேற்கூறை, 18 அங்குல கருப்பு நிற அலாய் வீல், புதுப்பிக்கப்பட்ட பம்பர், பின்புறத்தில் TRD லிமிடெட் எடிசன் பேட்ஜ் போன்றவை பெற்றுள்ளது.
குறிப்பிடதக்க இன்டிரியர் வசிதிகளில் சிலவற்றைக் காணலாம். அவை, ஹெட்-அப் டிஸ்ப்ளே, ஆட்டோ ஃபோல்டு ORVM, 360 டிகிரி கேமரா, டாஷ் கேம், ஏர் பியூரி ஃபையர், பட்டெல் விளக்குகள், டயர் பிரஷர் மானிட்டர் மற்றும் பின்புற இருக்கை பயணிகளுக்கு கதவுகளில் பொருத்தப்பட்ட வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர் கொண்டுள்ளது.
TRD என்றால் Toyota Racing Development என்பது விளக்கமாகும். 177 HP ஆற்றலை வெளிப்படுத்துவதுடன் 420 Nm டார்க்கினை வழங்கும் 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் பெற்றதாக வந்துள்ளது. இதில் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்று 4×4 மற்றும் 4×2 டிரைவிலும் கிடைக்க உள்ளது.