டொயோட்டா நிறுவனததின் ஆடம்பர வசதிகளை பெற்ற எஸ்யூவி மாடலாக செஞ்சுரி ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்டள்ளது. செடான் ரக மாடல் ஒன்று ஜப்பானில் மட்டும் விற்பனை செய்யப்படும் நிலையில், எஸ்யூவி ரக மாடல் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
1967 ஆம் ஆண்டு முதல் டொயோட்டா செஞ்சுரி மாடல்களில் “பீனிக்ஸ் இலச்சினை” பயன்படுத்துவது வழக்கமாகும். அதனை தொடர்ந்து உறுதிப்படும் வகையில் இந்த புதிய பிரீமியம் எஸ்யூவி மாடலிலும் Phoenix லோகோ கிரில்லில் முக்கிய இடத்தைப் பெறுகிறது.
Toyota Century SUV
செஞ்சுரி மேல்நோக்கிய நிலையில் எஸ்யூவி மாடல்களுக்கு உரித்தான வடிவமைப்பினை கொண்டு பாக்ஸி வடிவமைப்பினை பெற்று, தேன்கூடு போன்ற கிரில் அமைப்பின் மத்தியில் பீனிக்ஸ் லோகோ, இரு பிரிவுகளை பெற்ற எல்இடி ஹெட்லைட் மற்றும் பின்புறத்தில் மிக நேர்த்தியான எல்இடி டெயில் லைட்டுகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
நான்கு இருக்கைகள் கொண்ட டொயோட்டாவின் செஞ்சுரி எஸ்யூவி பரிமாணங்கள் 5,205மிமீ நீளம், 1,990மிமீ அகலம் மற்றும் 1,805மிமீ உயரம், 2,950மிமீ வீல்பேஸ் கொண்டுள்ளது. 20 அங்குல அலாய் வீல் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் ஆப்ஷனலாக 22-இன்ச் அலாய் வீல் பெறலாம்.
இன்டிரியரில் அதிகப்படியான ஆடம்ப வசதிகள் கொண்டு பின்புற இருக்கைக்கு பல வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு 12.3-இன்ச் டிஸ்ப்ளேபிவில் ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் மற்றொன்று இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்ட்டராக உள்ளது. இந்த மாடலில் சுழலும் வகையிலான பிக்னிக் டேபிள், இரண்டு 11.6-இன்ச் டிவி, இரண்டு நீக்கக்கூடிய 5.5-இன்ச் டச்ஸ்கிரீன் கண்ட்ரோல் பேனல்கள் மற்றும் குளிர்சாதன பெட்டியையும் பெறுகிறது.
புதிதாக உருவாக்கப்பட்ட 3.5-லிட்டர் V6 பிளக்-இன் ஹைப்ரிட் பெறுகின்ற டொயோட்டா செஞ்சூரி எஸ்யூவி, 406hp பவரை வெளிப்படுத்துகின்றது. ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனை பெறுகின்ற மாடல் 8-வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ். ஜப்பானிய WLTC முறையின் படி, 69 கிமீ வரை அனைத்து எலக்ட்ரிக் மூலம்பயணிக்கலாம். 100 கிமீக்கு சராசரியாக 7 லிட்டர் எரிபொருள் ஹைபிரிட் என்ஜின் வழங்க உள்ளது.
நார்மல், ஈகோ மற்றும் ஸ்போர்ட் உள்ளிட்ட பலவிதமான டிரைவ் மோடுகளுடன் மிக முக்கியமாக உள்ள ‘ரியர் கம்ஃபோர்ட்’ மோடு உள்ளது, இந்த மோடில் பின்புற பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் டிரைவிங் மற்றும் பிரேக்கிங் செயல்பாடுகளுக்கு எந்த வகையிலும் இடையறு ஏற்படுத்தாது என டொயோட்டா தெரிவித்துள்ளது.
ஜப்பான் சந்தையில் முதற்கட்டமாக மாதம் 30 யூனிட்டுகள் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், இந்தியா உட்பட சர்வதேச சந்தையில் விற்பனைக்கு அடுத்த சில மாதங்களுக்கு பிறகு கிடைக்கலாம்.
Toyota century suv image gallery