இந்தியாவின் நான்கு சக்கர வாகன விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், குறிப்பாக யுட்டிலிட்டி வாகன சந்தையின் வளர்ச்சி அபரிதமாக உள்ளது. இந்தியாவின் முன்னணி எஸ்யூவி மாடல்களில் ஒன்றான மஹிந்திரா பொலிரோ பட்டியிலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
டாப் 5 யூவி கார்
இந்திய மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் யுட்டிலிட்டி வாகனங்கள் விற்பனை அதிகரித்து வரும் நிலையில் கடந்த 2016-2017 நிதி ஆண்டை விட 20.97 சதவீத வளர்ச்சியை ((FY2017: 761,998) பெற்றுள்ளது. கடந்த 2018 நிதி ஆண்டில் 921,780 எண்ணிக்கையில் யூட்டிலிட்டி வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளது.
பட்டியலில் மாருதி நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற எஸ்யூவி மாடலாக விளங்கும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி அமோகமான வரவேற்பினை பெற்று சந்தையில் முதல் மாடலாக விறங்குகின்றது. 2018 ஆம் நிதி வருடத்தில் 148,462 என்ற எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.
அதனை தொடர்ந்து பிரபலமான ஹூண்டா க்ரெட்டா எஸ்யூவி உள்ளது. மேலும் பல ஆண்டுகளாக சந்தையில் முதன்மையான எஸ்யூவி ராஜாவாக விளங்கி வரும் மஹிந்திரா பொலிரோ பட்டியிலில் மூன்றாவது இடத்திலும், அரசியல்வாதிகள் முதல் அதிபர்கள் விரும்பக்கூடிய டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா நான்காவது இடத்திலும் எர்டிகா 5வது இடத்திலும் உள்ளது.
டாப் 5 யூவி பட்டியல் FY17 & FY18
மாடல் | 2016-17 | தர வரிசை | மாடல் | 2017-18 |
மாருதி விட்டாரா பிரெஸ்ஸா | 108,640 | 1 | மாருதி விட்டாரா பிரெஸ்ஸா | 148,462 |
ஹூண்டாய் க்ரெட்டா | 96,899 | 2 | ஹூண்டாய் க்ரெட்டா | 107,136 |
டொயோட்டா இன்னோவா | 79,092 | 3 | மஹிந்திரா பொலிரோ | 85,368 |
மஹிந்திரா பொலிரோ | 69,328 | 4 | டொயோட்டா இன்னோவா | 74,137 |
மாருதி எர்டிகா | 63,527 | 5 | மாருதி எர்டிகா | 66,141 |