இந்தியா பயணிகள் வாகன சந்தை தொடர்ந்து சிறப்பான வளர்ச்சி கண்டு வரும் நிலையில், மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. கடந்த ஏப்ரல் 2018 மாதந்திர விற்பனையில் முதல் 10 இடங்களை பிடித்துள்ள கார்களை டாப் 10 கார்கள் – ஏப்ரல் 2018 செய்தி குறிப்பில் காணலாம்.
டாப் 10 கார்கள் – ஏப்ரல் 2018
கடந்த மார்ச் மாதம் ஆல்டோ கார் முதலிடத்தை கைப்பற்றிய நிலையில், தற்போது மீண்டும் முதலிடத்தை டிசையர் காரிடம இழந்து மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. டாப் 10 வரிசையில் முதலிடத்தை மாருதி சுசூகி டிசையர் 25,395 எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.
முதல் 10 இடங்களில் 7 இடங்களை மாருதி சுசூகி வசம் உள்ள நிலையில் மற்ற மூன்று இடங்களில் ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ 10 , எலைட் 20 மற்றும் க்ரெட்டா இடம்பெற்றுள்ளது. குறிப்பாக மஹிந்திரா பொலிரோ 11 இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. டியாகோ மற்றும் ரெனோ க்விட் ஆகியவை விற்பனையில் பின் தங்கியுள்ளது.
தொடர்ந்து முழுமையான 2018 ஏப்ரல் மாத விற்பனை விபர பட்டியலை காண கீழே வழங்கப்பட்டுள்ள அட்டவனையில் காணலாம்.
விற்பனையில் டாப் 10 கார்கள் அட்டவனை – ஏப்ரல் 2018
வ. எண் | தயாரிப்பாளர் | ஏப்ரல் – 2018 |
1. | மாருதி சுசூகி டிசையர் | 25,935 |
2. | மாருதி சுசூகி ஸ்விஃப்ட் | 22,776 |
3. | மாருதி சுசூகி ஆல்டோ | 21,233 |
4. | மாருதி சுசூகி பலேனோ | 20,412 |
5. | மாருதி சுசூகி வேகன்ஆர் | 16,561 |
6. | ஹூண்டாய் எலைட் ஐ20 | 12,369 |
7. | ஹூண்டாய் கிராண்ட் ஐ10 | 12,174 |
8. | மாருதி விட்டாரா பிரெஸ்ஸா | 10,818 |
9. | மாருதி சுசூகி செலிரியோ | 9,631 |
10. | ஹூண்டாய் க்ரெட்டா (Automobile Tamilan) | 9,390 |