டாடா மோட்டார்சின் டிகோர் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்து ஓர் ஆண்டு நிறைவு பெறுவதை கொண்டாடும் நோக்கில் கூடுதல் வசதிகளை பெற்ற டாடா டிகோர் Buzz ₹ 5.68 விலையில் பெட்ரோல் மாடல் , ₹ 6.57 லட்சத்தில் டீசல் மாடலும் விற்பனைக்கு வெளியாகியுள்ளது.
டாடா டிகோர் Buzz
விற்பனையில் உள்ள மிட் வேரியன்ட் மாடலான XT வேரியன்டை பின்பற்றி கூடுதல் வசதிகள் இணைக்கபட்டுள்ள டிகோர் பஸ் ஸ்பெஷல் எடிஷன் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் எவ்விதமான மெக்கானிக்கல் மாற்றங்கள் இல்லாமல், டாடா மோட்டார்ஸ் டீலர்கள் வாயிலாக கிடைக்க தொடங்கியுள்ளது.
1.2 லிட்டர் ரெவோட்ரான் என்ஜின் ஆற்றல் 83.8பிஹெச்பி மற்றும் டார்க் 114 என்எம் ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
69 bhp ஆற்றலை வழங்கும் புதிய 1.05 லிட்டர் ரெவோடார்க் என்ஜின் டார்க் 140 Nm ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
டிகோர் Buzz எடிசன் மாடலில் மேற் கூரை பளபளப்பு மிகுந்த கருப்பு நிறத்தை பெற்றதாக, இரட்டை வண்ண `அலாய் வீல் , கருப்பு வண்ண ரியர் வியூ மிரர்கள், முன்புற க்ரில் அமைப்பில் சிவப்பு வண்ண அலங்காரம் மற்றும் பின்புறத்தில் பூட் லிட்டில் Buzz எடிசன் பேட்ஜ் கொடுக்கப்பட்டுள்ளது. இன்டிரியர் அமைப்பில் ஏசி வென்ட்டுகளை சுற்றிலும் சிவப்பு வண்ண அலங்காரம் இடம்பெற்றிருக்கிறது. புதிய உயர் தர ஃபேப்ரிக் இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளது.
டாடா டியாகோ அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்ட டீகோர் சீரான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றது.