டாடா மோட்டார்சின் டியாகோ EV காரின் 2025 ஆம் ஆண்டிற்கான மாடலின் ரேஞ்ச் 293 கிமீ வரை டாப் வேரியண்ட் வெளிப்படுத்தும் நிலையில் பேட்டரி விபரம், முக்கியமசங்கள் மற்றும் ஆன்-ரோடு விலை ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.
Tata Tiago EV on-road Price list
டியாகோ எலக்ட்ரிக் காரில் 19.2kWh மற்றும் 24kWh என இருவிதமான பேட்டரி ஆப்ஷனை பெற்று ரூ.7.99 லட்சம் முதல் ரூ.11.14 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் டியாகோ ஆன்-ரோடு 19.2kWh MR விலை ரூ.8.56 லட்சம் முதல் ரூ.9.63 லட்சம் வரையும், 24kWh LR விலை 10.93 லட்சம் முதல் ரூ.11.95 லட்சம் வரை அமைந்துள்ளது.
Variant | Ex-showroom Price | on-road Price |
Tiago.EV 19.2Kwh XE | Rs 7,99,000 | Rs 8,55,661 |
Tiago.EV 19.2Kwh XT | Rs 8,99,000 | Rs 9,62,543 |
Tiago.EV 24Kwh XT | Rs 10,14,000 | Rs 10,92,920 |
Tiago.EV 24Kwh XZ+Tech | Rs 11,14,000 | Rs 11,94,811 |
பேஸ் டியாகோ.இவி MR 19.2kWh வேரியண்ட் அதிகபட்சமாக 45hp, 110Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் சிங்கிள் சார்ஜ் மூலம் 223 கிமீ ரேஞ்ச் கிடைக்கும் என சான்றிதழ் பெறப்பட்டு 7.2Kw சார்ஜர் மூலம் 10%-100% பெற 2.6 மணி நேரமும், 3.3Kw சார்ஜர் மூலம் 10%-100% பெற 6.9 மணி நேரமும், எடுத்துக் கொள்வதுடன் டிசி விரைவு சார்ஜரில் 10%-80% ஒரு மணி நேரம் போதுமானதாகும்.
டியாகோ.இவி MR 24kWh வேரியண்டில் அதிகபட்சமாக 55hp, 114Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் சிங்கிள் சார்ஜ் மூலம் 2 கிமீ ரேஞ்ச் கிடைக்கும் என சான்றிதழ் பெறப்பட்டு 7.2Kwh சார்ஜர் மூலம் 7.2Kw சார்ஜர் மூலம் 10%-100% பெற 3.6 மணி நேரமும், 3.3Kw சார்ஜர் மூலம் 10%-100% பெற 8.7 மணி நேரமும், எடுத்துக் கொள்வதுடன் டிசி விரைவு சார்ஜரில் 10%-80% ஒரு மணி நேரம் போதுமானதாகும்.
2 ஏர்பேக்குடன் கிடைக்கின்ற டாடாவின் டியாகோ இவி மாடல் இந்தியாவில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்ற ஹேட்ச்பேக் ரக மாடலாக விளங்குகின்றது.