டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் துவக்கநிலை எஸ்யூவி சந்தையில் உள்ள பஞ்ச் காரின் உற்பத்தி எண்ணிக்கை 3,00,000 இலக்கை வெற்றிகரமாக கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்டர் உள்ளிட்ட சிறிய ரக மாடல்களுக்கு கடும் சவாலினை ஏற்படுத்தி வருகின்றது.
நெக்ஸான் எஸ்யூவி மாடலை தொடர்ந்து பஞ்ச் மிகப்பெரும் சந்தை பங்களிப்பை டாடா மோட்டார்ஸ் பெற முக்கிய காரணமாக உள்ளது. அடுத்த சில மாதங்களில் பஞ்ச்.இவி விற்பனைக்கு வரக்கூடும்.
Tata punch
பஞ்ச் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இருவிதமாக கிடைக்கின்ற நிலையில் 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர் என்ஜினை கொண்டிருக்கின்ற பஞ்ச் எஸ்யூவி காரின் பெட்ரோல் வேரியண்ட் 86hp மற்றும் 113Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
இதே என்ஜின் CNG முறைக்கு வரும்பொழுது, 73.4 hp மற்றும் 104 Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இது 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது.
டாடா பஞ்ச் ரஞ்சன்கானில் உள்ள ஆலையில் தயாரிக்கப்படுகின்ற நிலையில் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இன்ஜின் வகைகளில் விலை ரூ.6 லட்சம் முதல் ரூ.10.10 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) ஆக உள்ளது.
கூடுதலாக படிக்க – டாடா பஞ்ச் Vs ஹூண்டாய் எக்ஸ்டர் ஒப்பீடு
மேலும் டாடா மோட்டார்ஸ் டிசம்பர் மாத விற்பனை முடிவில் ஹூண்டாய் நிறுவனத்தை விட 925 கார்களை கூடுதலாக விற்பனை செய்து இரண்டாமிடத்தை கைப்பற்றியிருக்கின்றது. மேலும் டிசம்பர் மாத விற்பனையில் டாப் 10 இடங்களில் முதலிடத்தை நெக்ஸான் மற்றும் மூன்றாமிடத்தில் பஞ்ச் உள்ளது.
விற்பனைக்கு வெளியிடப்பட்ட 26 மாதங்களில் தனது 3,00,000 உற்பத்தி இலக்கை எட்டியுள்ளது.