இந்தியாவின் முதன்மையான எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர் டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ள புதிய பஞ்ச்.இவி காரின் விலை ரூ.10.99 லட்சம் முதல் ரூ.14.49 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நெக்ஸான்.இவி, டிகோர்.இவி மற்றும் டியாகோ.இவி கார்களை தொடர்ந்து பஞ்ச்.இவி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் முமன்முறையாக பேட்டரி கார்களை தேர்ந்தெடுப்பவர்களுக்கு முக்கியமான ஒரு மாடலாக வலம் வரவுள்ளது.
Tata Punch.ev
டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ள புதிய Acti-EV (Advanced Connected Tech-Intelligent Electric Vehicle) பிளாட்ஃபாரத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ள முதல் மாடலான பஞ்ச்.இவி காரில் ஸ்டாண்ட்ர்டு 25Kwh வேரியண்ட் மற்றும் லாங் ரேஞ்ச் 35kwh வேரியண்ட் என இரண்டு விதமாக வெளியிடப்பட்டுள்ளது.
பஞ்ச்.இவி மாடலில் ஸ்டாண்டர்டு வேரியண்ட் 25 kWh பேட்டரி பேக் பெற்று 82 PS பவர் மற்றும் 114 Nm டார்க் வெளிப்படுத்தும், முழுமையான சிங்கிள் சார்ஜில் 315 கிமீ ரேஞ்ச் வழங்கும் என சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த வேரியண்ட் டாப் ஸ்பீடு மணிக்கு 115 கிமீ ஆகும்.
Long Range மாடலில் இடம்பெற்றிருக்கின்ற 35 kWh பேட்டரி பேக் பெற்று 122 PS பவர் மற்றும் 190 Nm டார்க் வெளிப்படுத்தலாம். முழுமையான சிங்கிள் சார்ஜில் 421 கிமீ ரேஞ்ச் வழங்கும் என சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. இந்த வேரியண்ட்டின் டாப் ஸ்பீடு மணிக்கு 140 கிமீ ஆகவும், 0-100 கிமீ வேகத்தை எட்ட 9.5 வினாடி போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்ச் எலக்ட்ரிக் காரில் ஸ்டாண்டர்டு வேரியண்ட் ஆனது 3.3 kw மற்றும் லாங் ரேஞ்ச் வேரியண்ட் 7.2kW வரை AC ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டும் அடுத்தப்படியாக 10-80 % சார்ஜஜ் பெற 50kw DC ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் வெறும் 56 நிமிடங்கள் போதுமானதாகும்.
டாடா பஞ்ச்.இவி இன்டிரியரில் இரண்டு ஸ்போக் கொண்ட ஸ்டீயரிங் வீல், 10.25 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் கிளஸ்ட்டர் கொண்டிருப்பதுடன் மேலும் FOTA மேம்பாடு, 360 டிகிரி கேமரா, ஆட்டோ ஹோல்டு உடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் ஆறு ஏர்பேக்குகளையும் பெற்றிருக்கின்றது.
டாப் எம்பவர்டூ + வேரியண்டில் Arcade.ev ஆப் கனெக்ட்டிவிட்டி வசதிகள், வயர்லெஸ் ஸ்மார்ட் போன் சார்ஜர் மற்றும் 10.24-இன்ச் டிஜிட்டல் காக்பிட் பல்வேறு வசதிகள் உள்ளன.
new Tata Punch EV price list
Smart – Rs. 10.99 lakh
Smart+ – Rs. 11.49 lakh
Adventure – Rs. 11.99 lakh
Adventure LR – Rs. 12.99 lakh
Empowered – Rs. 12.79 lakh
Empowered LR – Rs. 13.99 lakh
Empowered+ – Rs. 13.29 lakh
Empowered+ LR – Rs. 14.49 lakh