இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள டாடா பஞ்ச்.இவி எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலின் தமிழ்நாட்டின் ஆன் ரோடு விலை பட்டியல் மற்றும் ரேஞ்ச் தொடர்பான அனைத்து விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
பன்ச்.இவி எஸ்யூவி காருக்கு நேரடியான போட்டியை சிட்ரோன் eC3 உட்பட டிகோர்.இவி, டியாகோ.இவி ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது.
Tata Punch.ev
டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்திய Acti-EV (Advanced Connected Tech-Intelligent Electric Vehicle) பிளாட்ஃபாரத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ள முதல் மாடலான பஞ்ச்.இவி காரை தொடர்ந்து கர்வ்.இவி, ஹாரியர்.இவி, சியரா.இவி ஆகியவற்றை அடுத்த 12-18 மாதங்களுக்குள் வெளியாடப்பட உள்ளது.
பஞ்ச்.இவி காரில் ஸ்டாண்ட்ர்டு 25Kwh வேரியண்ட் மற்றும் லாங் ரேஞ்ச் 35kwh வேரியண்ட் என இரண்டு விதமாக வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்டாண்டர்டு வேரியண்ட்டில் 25 kWh பேட்டரி பேக் பெற்று 82 PS பவர் மற்றும் 114 Nm டார்க் வெளிப்படுத்தும், முழுமையான சிங்கிள் சார்ஜில் 315 கிமீ ரேஞ்ச் வழங்கும் என MIDC முறையில் வெளியிட்டுள்ளது. இந்த வேரியண்ட் டாப் ஸ்பீடு மணிக்கு 115 கிமீ ஆகும்.
Long Range மாடலில் இடம்பெற்றிருக்கின்ற 35 kWh பேட்டரி பேக் பெற்று 122 PS பவர் மற்றும் 190Nm டார்க் வெளிப்படுத்தலாம். முழுமையான சிங்கிள் சார்ஜில் 421 கிமீ ரேஞ்ச் வழங்கும் என MIDC சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. இந்த வேரியண்ட்டின் டாப் ஸ்பீடு மணிக்கு 140 கிமீ ஆகவும், 0-100 கிமீ வேகத்தை எட்ட 9.5 வினாடி போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tata Punch.ev Variant | ex-showroom Prices | on-road Prices |
---|---|---|
Smart STD 3.3kw | ₹ 10,98,999 | ₹ 11,69,542 |
Smart Plus STD 3.3kw | ₹ 11,48,999 | ₹ 12,22,321 |
Adventure STD 3.3kw | ₹ 11,99,000 | ₹ 12,74,642 |
Adventure S STD 3.3kw | ₹ 12,49,000 | ₹ 13,26,651 |
Empowered STD 3.3kw | ₹ 12,79,000 | ₹ 13,57,451 |
Empowered S STD 3.3kw | ₹ 13,29,900 | ₹ 14,09,653 |
Empowered Plus STD 3.3kw | ₹ 13,29,000 | ₹ 14,09,653 |
Empowered Plus S STD 3.3kw | ₹ 13,79,900 | ₹ 14,61,874 |
Adventure LR 3.3kw | ₹ 12,99,900 | ₹ 13,84,601 |
Adventure LR ACFC 7.2kw | ₹ 13,49,000 | ₹ 14,36,876 |
Adventure S LR 3.3kw | ₹ 13,49,000 | ₹ 14,36,876 |
Adventure S LR ACFC 7.2kw | ₹ 13,99,000 | ₹ 14,89,578 |
Empowered LR 3.3kw | ₹ 13,99,000 | ₹ 14,89,578 |
Empowered LR ACFC 7.2kw | ₹ 14,49,000 | ₹ 15,41,986 |
Empowered S LR 3.3kw | ₹ 14,49,900 | ₹ 15,41,986 |
Empowered S LR ACFC 7.2kw | ₹ 14,99,900 | ₹ 15,94,098 |
Empowered+ LR 3.3kw | ₹ 14,49,000 | ₹ 15,41,986 |
Empowered+ LR ACFC 7.2kw | ₹ 14,99,000 | ₹ 15,94,098 |
Empowered+ S LR 3.3kw | ₹ 14,99,000 | ₹ 15,94,098 |
Empowered+S LR ACFC 7.2kw | ₹ 15,49,000 | ₹ 16,51,945 |
(on road price in TamilNadu)
*LR – long range, STD – standard, S means Sunroof, ACFC- AC Fast charging
கொடுக்கப்பட்டுள்ள ஆன்ரோடு விலை தமிழ்நாடு ஆகும். கூடுதலாக ஆக்ஸசெரீஸ் இணைக்கும் பொழுது விலை மாறுபடும்.