4 மீட்டருக்கு குறைவான நீளம் பெற்ற காம்பாக்ட் டாடா நெக்ஸான் எஸ்யூவி காரில் கூடுதலாக எலக்ட்ரிக் சன்ரூஃப் உட்பட பல்வேறு வசதிகளை பெற்ற XM(S) வேரியண்ட் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. முன்பாக விற்பனையில் உள்ள XM வேரியண்ட்டை விட ரூ.50,000 வரை விலை கூடுதலாக அமைந்துள்ளது.
தற்போது நெக்ஸான் கார் ரூ.7 லட்சத்தில் துவங்கி அதிகபட்சமாக ரூ. 12.70 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில், இந்தியாவில் கிடைக்கின்ற கார்களில் குறைந்த விலையில் எலக்ட்ரிக் சன்ரூஃப் பெற்ற காராக நெக்ஸான் (முன்பாக ஹோண்டா ஜாஸ்) அமைந்திருக்கின்றது.
1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் இப்போது 120 ஹெச்பி பவர் மற்றும் 170 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடல் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 வேக ஏஎம்டி கியர்பாக்ஸை பெறுகின்றது.
அடுத்ததாக, பிஎஸ்6 டீசல் 1.5 லிட்டர் ரெவோடார்க் டர்போ டீசல் 3,750 ஆர்.பி.எம் சுழற்சியில் 110 ஹெச்பி மற்றும் 1,500-2,750 ஆர்.பி.எம்-ல் 260 என்எம் டார்க் வழங்கும். இந்த என்ஜினும் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி ஆட்டோ கியர்பாக்ஸ் விருப்பங்களுடன் கிடைக்கும்.
XM(S) பெட்ரோல் வேரியண்டில் மட்டும் எலக்ட்ரிக் சன்ரூஃப் பெற்றுள்ள நிலையில், டீசல் வேரியண்டில் சன்ரூஃப் இல்லை. ஆட்டோ வைப்பர், ஆட்டோ ஹெட்லைட், ஸ்டீயரிங் மவுன்டேட் ஆடியோ கன்ட்ரோல், டூயல் ஏர்பேக், ஹீல் ஹோல்டு அசிஸ்ட், போன்றவை இடம்பெற்றுள்ளது.
டாடா நெக்ஸான் XM (S) வேரியண்ட் விலை பட்டியல்
XM (S) Petrol Manual – ரூ. 8.36 லட்சம்
XMA (S) Petrol AMT – ரூ. 8.96 லட்சம்
XM (S) Diesel Manual – ரூ. 9.70 லட்சம்
XMA (S) Diesel AMT – ரூ. 10.30 லட்சம்
(அனைத்தும் விற்பனையக விலை டெல்லி)