காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடல்களில் களமிறங்க உள்ள டாடா நெக்ஸான் எஸ்யூவி பல்வேறு புதிய வசதிகளுடன் மிகவும் ஸ்டைலிசான மாடலாக விளங்குகின்றது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் விற்பனைக்கு வெளியாக உள்ளது.
டாடா நெக்ஸான் எஸ்யூவி
மிகவும் சவாலான விலையில் அறிமுகம் செய்யப்பட உள்ள நெக்ஸான் எஸ்யூவியில் 1.2 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 108bhp பவருடன் 170Nm டார்க்கினை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரெவோடார்க் வரிசையில் புத்தம் புதிதாக வரவுள்ள 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 108bhp பவருடன் 260 Nm டார்க்கினை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு எஞ்சினிலும் 6 வேக TA6300 சிங்க்ரோமெஸ் மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.
மிக நேர்த்தியான இம்பேக்ட் டிசைன் பின்னணியாக வடிவமைக்கப்பட்டுள்ள நெக்ஸான் மாடலில் நேர்த்தியான தேன்கூடு கிரிலுடன் புராஜெக்டர் ஹெட்லேம்பை பெற்றதாக, பக்கவாட்டில் ஸ்டைலிசான அலாய் வீல் பெற்ற இந்த மாடலில் பின்புறத்தில் எல்இடி டெயில் விளக்கை கொண்டுள்ளது.
இன்டிரியரில் முதன்முறையாக காம்பேக்ட் ரக எஸ்யூவி பிரிவில் மிதக்கும் வகையிலான 6.5 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே உள்ளிட்ட அம்சங்களுடன் தாராளமான இடவசதி கொண்டதாக வரவுள்ளது. முன்பக்கத்தில் இரட்டை காற்றுப்பை, ஏபிஎஸ் மற்றும் இபிடி போன்றவை நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்றிருக்கின்றது.
விட்டாரா பிரெஸ்ஸா , டியூவி300 , ஈகோஸ்போர்ட், நூவோஸ்போர்ட் போன்றவற்றுக்கு நேரடியான சவாலாக விளங்க உள்ள டாடா நெக்ஸான் விலை ரூ. 7 லட்சம் முதல் ரூ. 10 லட்சத்திற்குள் அமையலாம்.
வரும் செப்டம்பர் 21ந் தேதி விற்பனைக்கு வரவுள்ள நெக்ஸான் செப்டம்பர் 11ந் தேதி முதல் முன்பதிவு தொடங்கப்பட உள்ளது.