காம்பேக்ட் ரக எஸ்யூவி பிரிவில் களமிறங்கி உள்ள டாடா நெக்சன் எஸ்யூவி ரூ.5.97 விற்பனைக்கு லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் தற்போது நெக்சன் காம்பேக்ட் ரக எஸ்.யூ.வி பிரிவில் மிகவும் குறைந்த விலை மாடலாகும்.
கடுமையான சவால்கள் நிறைந்த தொடக்க நிலை காம்பேக்ட் ரக எஸ்யூவி கார்களுக்கு போட்டியாக மிகவும் ஸ்டைலிசான தோற்ற அமைப்பில் டாடா மோட்டார்சின் புதிய இம்பேக்ட் டிசைன் மொழி தாத்பரியத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும். நெக்ஸான் காரின் டிசைன் வடிவம் ரேஞ்ச்ரோவர் எவோக் காரின் வடிவ சாயலை பெற்றிருக்க வாய்ப்புகள் உள்ளது.
நெக்ஸான் தகவல்கள்
1. டாடா மோட்டார்சின் புதிய டிசைன் மொழி இம்பேக்ட் வடிவ தாத்பரியத்தில் உருவாக்கப்பட்டுள்ள டியாகோ அமோக வரவேற்பினை பெற்றுள்ளதை தொடர்ந்து வடிவமைக்கப்பட்டிருக்கும் கைட் 5 செடான் காரினை தொடர்ந்து நெக்ஸான் எஸ்யூவி வரவுள்ளது.
2. நெக்ஸான் தோற்ற அமைப்பில் சிறப்பான வடிவ தாத்பரியங்களுடன் புராஜெக்டர் முகப்பு விளக்கு , பகல் நேர எல்இடி ரன்னிங் விளக்கு , 16 இன்ச் அலாய் வீல் போன்றவற்றுடன் 4 மீட்டருக்குள் அதாவது 3990 மிமீ நீளத்தினை பெற்றிருக்கும்.
3. விற்பனையில் உள்ள டாடா டியாகோ காரின் உட்புற அமைப்பினை போன்ற அம்சங்களுடன் 5 இருக்கை ஆப்ஷன்களுடன் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் , சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்ட டேஸ்போர்டு , நேர்த்தியான இருக்கை அமைப்பு , தாரளமான இடவசதி போன்றவற்றுடன் 2470மிமீ வீல்பேஸ் கொண்டிருக்கின்றது.
4. இஞ்ஜின் ஆப்ஷன் 1.2 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 108bhp பவருடன் 170Nm டார்க்கினை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரெவோடார்க் வரிசையில் புத்தம் புதிதாக வரவுள்ள 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 108bhp பவருடன் 260 Nm டார்க்கினை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு எஞ்சினிலும் 6 வேக TA6300 சிங்க்ரோமெஸ் மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.
Specifications | Petrol | Diesel |
எஞ்சின் சிசி | 1198 cc | 1497 cc |
பவர் | 108 bhp @ 5000 rpm | 108 bhp @ 3750 rpm |
டார்க் | 170 Nm @ 1750-4000 rpm | 260 Nm @ 1500-2750 rpm |
கியர்பாக்ஸ் | 6-speed MT | 6-speed MT |
மைலேஜ் | 17 kmpl | 21.5 kmpl |
5. முன்பக்க இரட்டை காற்றுப்பை, ஏபிஎஸ் மற்றும் இபிடி போன்றவை நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்றிருக்கும்.
6. போட்டியாளர்கள் விட்டாரா பிரெஸ்ஸா , டியூவி300 , ஈகோஸ்போர்ட், நூவோஸ்போர்ட் போன்றவற்றுக்கு நேரடியான சவாலாக டாடா நெக்ஸான் எஸ்யுவி அமைந்திருக்கும்.
டாடா நெக்சன் விலை
Tata Nexon | Petrol | Diesel |
XE | ரூ.5,97,315 | ரூ. 6,97,509 |
XM | ரூ.6,62,217 | ரூ. 7,58,963 |
XT | ரூ. 7,42,220 | ரூ. 8,27,414 |
XZ+ | ரூ.8,57,224 | ரூ. 9,42,418 |
XZ+ Dual Roof | ரூ.8,72,225 | ரூ. 9,57,419 |