இந்தியாவின் பிரசத்தி பெற்ற காம்பேக்ட் எஸ்யூவி டாடா நெக்ஸான் காரின் 2023 ஆம் ஆண்டிற்கான மாடலுக்கு முன்பதிவு துவங்கபட்டுள்ளது. முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட டிசைன் அம்சங்கள் கூடுதல் வசதிகள் மற்றும் 6 ஏர்பேக்குகள் என பல்வேறு பாதுகாப்பு வசதிகளை பெற்றிருக்கின்றது.
நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் காரில் தொடர்ந்து 1.2 லிட்டர் டர்போ மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டதாக விற்பனைக்கு செப்டம்பர் 14 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
2023 Tata Nexon bookings open
புதிய நெக்ஸானில் ஸ்மார்ட், ஸ்மார்ட்+, ஸ்மார்ட்+ (S), ப்யூர்+, ப்யூர்+ (S), க்ரீயேட்டிவ், க்ரீயேட்டிவ்+, க்ரீயேட்டிவ்+ (S), ஃபியர்லெஸ், ஃபியர்லெஸ் (S) மற்றும் ஃபியர்லெஸ்+ (S) ஆகிய வேரியண்டுகள் என மொத்தமாக 11 விதமான வேரியண்டில் கிடைக்க உள்ளது.
120hp பவரையும், 170Nm டார்க் வழங்கும் 1.2-லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. தற்பொழுது 5-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு AMT மற்றும் 7- வேக டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் (க்விக் ஷிஃப்டர்) என 4 கியர்பாக்ஸ்களில் கிடைக்கிறது.
அடுத்தப்படியாக, 115hp பவர் மற்றும் 160Nm டார்க் வெளிப்படுத்தும் 1.5-லிட்டர் டீசல் என்ஜின் ஆனது, 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு AMT உடன் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், நெக்ஸான்.இவி கார் வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.