வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி துவங்குகின்ற 2024 சர்வதேச பாரத் மொபைலிட்டி ஷோவில் (Bharat Mobility Expo 2024) டாடா மோட்டார்சின் நெக்ஸான் சிஎன்ஜி உட்பட 8 மாடல்கள் மற்றும் வர்த்தக வாகனங்கள் பிரிவில் பிரைமா.H55S H2 ICE மாடல் உட்பட 10 வாகனங்களை, ADAS தொழில்நுட்பங்கள், H2, CNG, LNG வாகனங்களின் தொடர்பான நுட்பங்கள் மற்றும் கனெக்ட்டிவிட்டி அம்சங்களை காட்சிப்படுத்த உள்ளது.
டாடா நெக்ஸான் இந்தியாவின் மிகவும் அதிக வாடிக்கையாளர்களை பெற்று வரும் நிலையில் ICE, EV என இரண்டை தவிர இப்பொழுது சிஎன்ஜி கான்செப்ட் ஆனது நெக்ஸான் i-CNG கான்செப்ட் என்ற பெயரில் காட்சிப்படுத்தப்பட உள்ளதால் உற்பத்திக்கு அடுத்த சில மாதங்களுக்கு பிறகு வெளிவர வாய்ப்புகள் உள்ளது. விற்பனையில் உள்ள 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினில் சிஎன்ஜி ஆப்ஷன் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதுதவிர, டாடா கர்வ் கான்செப்ட் காட்சிப்படுத்தவும் முக்கிய விபரங்களை வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில் கூடுதலாக புதிய சஃபாரி எஸ்யூவி அடிப்படையில் டார்க் எடிசன், அல்ட்ராஸ் ரேசர், பஞ்ச்.இவி, நெக்ஸான்.இவி டார்க் எடிசன் , டாடா ஹாரியர்.இவி மற்றும் சஃபாரி காட்சிப்படுத்தப்பட உள்ளது.
வர்த்தக வாகனங்கள்
டாடாவின் வர்த்தக வாகனங்கள் பிரிவில் முதல் முறையாக டிரக்கில் பிரைமா.H55S H2 ICE என்ஜின் பெற்ற கான்செப்ட் மாடல் உட்பட பிரைமா. 5530.S LNG டிரக், எலக்ட்ரிக் பிரிவில் அல்ட்ரா e.9, பிரைமா E.28 K டிரக் ஆகியவற்றுடன் ஏஸ் சிஎன்ஜி, ஏஸ் இவி, இன்ட்ரா பை-ஃப்யூவல், அடுத்து பேருந்து பிரிவில் ஸ்டார்பஸ் FCEV, ஸ்டார்பஸ்.EV, மற்றும் கோச் ரக மேக்னா EV பேருந்து ஆகியவை பாரத் மொபைலிட்டி எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கபட உள்ளது.