டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பிரசத்தி பெற்ற நெக்ஸான், ஹாரியர், மற்றும் சஃபாரி கார்களில் ரெட் டார்க் எடிசன் மாடல்கள் டாப் வேரியண்டின் அடிப்படையில் கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட்டு விற்பனைக்கு கிடைக்க துவங்கியுள்ளது.
ரெட் டார்க் பதிப்பில் முந்தைய மாடலை விட மாற்றங்கள் முக்கியமாக தோற்ற அமைப்பிலும். சஃபாரி மற்றும் ஹாரியர் கார்களில் குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு மேம்பாடுகளையும் பெற்றுள்ளது.
Tata Nexon, Harrier, Safari Red Dark
நெக்ஸன், சஃபாரி மற்றும் ஹாரியர் ஆகியோரின் ரெட் டார்க் பதிப்பில் ஓபரான் கருப்பு வெளிப்புற வண்ணப்பூச்சு பெறுகின்றது. இந்த எஸ்யூவிகளின் ‘டார்க்’ பதிப்புகளுடன் வழங்கப்படுகிற நிறம் தான். முன் கிரில், ஃபெண்டர்கள் மற்றும் பிரேக் காலிப்பர்களில் பயன்படுத்தப்பட்ட சிவப்பு நிற பேட்ஜ்கள் வேறுபடுத்துகிறது. கருமை வண்ணத்தை முக்கியத்துவத்தை நீர்த்துப்போகாமல், சிவப்பு பிட்கள் வெளிப்புறங்களில் மிகக் குறைவாகவே பயன்படுத்தப்பட்டுள்ளன.
உட்புறத்தில் மூன்று மாடல்களும் ‘கார்னிலியன்’ சிவப்பு நிற இருக்கை அமைப்பை பெறுகின்றன. குயில்ட் பேட்டர்ன், சிவப்பு லீதரெட் கிராப் கைப்பிடிகள், டாஷ்போர்டில் சாம்பல் டிரிம் மற்றும் ஸ்டீயரிங் வீலில் பியானோ கருமை நிறம் உள்ளது.
என்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இடம் பெறவில்லை. நெக்ஸான் காரில் 120 ஹெச்பி பவர் வழங்குகின்ற 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 115 ஹெச்பி, 1.5 லிட்டர் டீசல் ஆகியவற்றுடன் வருகிறது. இரண்டு என்ஜின்களும் 6-ஸ்பீட் மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸுடன் இணைக்கப்படுகின்றன.
ஹாரியர் மற்றும் சஃபாரி 170 ஹெச்பி, 2.0 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வந்துள்ளது. இது 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
டாடா எஸ்யூவிகளுக்கு 3 ஆண்டுகள்/ 1,00,000 கி.மீ உத்தரவாதத்தை வழங்குகிறது.
ஹாரியர் மற்றும் சஃபாரி
ஹாரியர் மற்றும் சஃபாரி இரண்டு கார்களிலும் மிகப்பெரிய சிறப்பம்சமாக ADAS பாதுகாப்பு தொழில்நுட்பத்தை சார்ந்த ஆட்டோமேட்டிக் அவசரகால பிரேக்கிங் (AEB), முன்பக்க மோதல் எச்சரிக்கை, லேன் புறப்படும் எச்சரிக்கை, பாதை மாற்றம் உதவி மற்றும் போக்குவரத்து அடையாளம் அங்கீகாரம் ஆகியவை உள்ளது.
இரண்டு எஸ்யூவிகளும் அவற்றின் டாப் வேரியண்டினை அடிப்படையாகக் கொண்டு புதிய 10.25 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட், 7 அங்குல டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே மற்றும் 360 டிகிரி கேமராவைப் பெறுகின்றன.
சஃபாரி காரில் மேலும் சில கூடுதல் வசதிகளாக, இரண்டாவது வரிசையில் காற்றோட்டமான இருக்கைகள், கதவு கைப்பிடி அருகே ஆம்பியன்ட் லைட் மற்றும் அகலமான சன்ரூஃப், இரண்டாவது வரிசை பயணிகளுக்கு ஹெட் ரெஸ்ட் வழங்கப்பட்டுள்ளது.
Tata Nexon, Harrier, Safari Red Dark Editions price list
Models | Model Start Price (in INR, Ex-showroom, All India) | #DARK edition Start Price (in INR, Ex-Showroom, All India) |
Nexon (Petrol) | 7.80 Lakhs | 12.35 Lakhs |
Nexon (Diesel) | 9.99 Lakhs | 13.70 Lakhs |
Harrier (Diesel) | 15.00 Lakhs | 21.77 Lakhs |
Safari 7S (Diesel) | 15.65 Lakhs | 22.61 Lakhs |
Safari 6S (Diesel) | 22.26 Lakhs | 22.71 Lakhs |