வரும் செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி புதுப்பிக்கப்பட்ட 2023 டாடா நெக்ஸான் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. முந்தைய மாடலை விட முற்றிலும் பேம்பட்ட புதிய நவீனத்துவமான டிசைன் அம்சத்தை பெற உள்ள நெக்ஸானில் 11 விதமான வேரியண்டுகள் வரவுள்ளது.
நெக்ஸான் எஸ்யூவி காருக்கு போடியாக மஹிந்திரா எக்ஸ்யூவி 300, மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, கியா சோனெட், நிசான் மேக்னைட், ரெனால்ட் கிகர் மற்றும் மாருதி ஃபிரான்க்ஸ் உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ள உள்ளது.
2023 Tata Nexon Facelift
புதிய 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 115hp பவர் வழங்கும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் என இரு ஆப்ஷனை வழங்கும். இதில் பெட்ரோல் என்ஜின் மாடல் 5 வேக மேனுவல், 7 வேக டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் பெற உள்ளது. டீசல் என்ஜின் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் கொண்டிருக்கும்.
முந்தைய மாடலை விட முற்றிலும் மாறுபட்ட டிசைன் அம்சத்தை பெற்று நேர்த்தியான மெல்லிய தட்டையான எல்இடி ரன்னிங் விளக்குகள், புதிய ஹெட்லைட் கீழ் பகுதியில் பனி விளக்கு இணைக்கப்பட்டு, பம்பர் ஆனது மேம்பட்டு செங்குத்தான கிரில், கீழ்பகுதியில் கிளாடிங் சேர்க்கப்பட்டுள்ளது.
முன்பாக பக்கவாட்டில் வழங்கப்பட்டிருந்த கிளாடிங் நீக்கப்பட்டு, நேர்த்தியான வீல் ஆர்சு பெற்ற இரு வண்ண கலவையில் அலாய் வீல் கொண்டுள்ளது. மேற்கூறையில் எந்த மாற்றமும் இல்லை. பின்புறத்தில் புதுப்பிக்கப்பட்ட பம்பர் எல்இடி டெயில் லைட் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களையும் பெற உள்ளது.
இன்டிரியரில் பெரும்பாலான கண்ட்ரோல் மேனுவல் சுவிட்சுகள் நீக்கப்பட்டு அனைத்தும் தொடுதிரை அமைப்புடன் கூடியதாக அமைந்துள்ளது. இரண்டு ஸ்போக் பெற்ற ஸ்டீரிங் வீல் மத்தியில் கண்ட்ரோல் சுவிட்சுகள் உள்ளன.10.25 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மேம்படுத்தப்பட்டு நவீனத்துவமான அம்சங்களை பெற்று கனெக்ட்டிவிட்டி சார்ந்தவற்றை கொண்டதாக அமைந்துள்ளது.
செப்டம்பர் 14 ஆம் தேதி விற்பனைக்கு டாடா நெக்ஸான் மற்றும் நெக்ஸான் எலக்ட்ரிக் என இரண்டும் வெளியிடப்படுவதை தொடர்ந்து அனைத்து முக்கிய விபரங்களும் வெளியாகலாம்.