Categories: Car News

டாடா நெக்ஸான் EV மின்சார காரின் ரேஞ்சு, வசதிகள் விபரம்

tata nexon ev car

சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 312 கிமீ ரேஞ்சு வழங்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ள டாடா மோட்டார்ஸ் நெக்ஸான் EV கார் ஜனவரி 28 ஆம் தேதி விற்பனைக்கு வெளியாக உள்ளது.

ஜனவரி 22 ஆம் தேதி அல்ட்ராஸ் விற்பனைக்கு வெளியாக உள்ள நிலையில் அதனை தொடர்ந்து நெக்ஸான் இ.வி. பிறகு ஆட்டோ எக்ஸ்போ 2020 அரங்கில் மேம்பட்ட நெக்ஸான், டிகோர், மற்றும் டியாகோ கார்கள் என வரிசையாக புதிய மாடல்களை டாடா வெளியிட உள்ளது. இந்நிலையில், டாடாவின் ஜிப்ட்ரான் நுட்பத்தை பெறும் முதல் மாடலான நெக்ஸான் இ.வி. காரில் 7.0 இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உடன் இசட்கனெக்ட் என்ற பெயரில் 35க்கு மேற்பட்ட கனெக்ட்டிவிட்டி வசதிகளை வழங்குகின்றது.

நெக்ஸான் மின்சார காரில் பொருத்தப்பட்டுள்ள 30.2 KWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டு 128 ஹெச்பி பவர் மற்றும் 254 Nm டார்க் வெளிப்படுத்தும். 0-60 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 4.5 விநாடிகளும், 0-100 கிமீ வேகத்தை வெறும் 9.9 விநாடிகளில் எட்டிவிடும். முழுமையான சிங்கிள் சார்ஜில் 312 கிமீ ரேஞ்சு தரவல்லதாக ARAI சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இந்த மாடலை அதிகபட்சமாக 80 சதவீத சார்ஜிங் பெற டிசி ஃபாஸ்ட் சார்ஜர் வாயிலாக ஒரு மணி நேரத்திலும், சாதாரன ஏசி சார்ஜரில் 7-8 மணி நேரம் 80 சதவீத சார்ஜ் செய்ய இயலும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நெக்ஸான் EV ZConnect 

கூடுதலாக, நெக்ஸான் இ.வி காரில் ஏற்படுத்தப்பட்டுள்ள கனெக்ட்டிவிட்டி சார்ந்த தொழில்நுட்பத்துடன் வரவுள்ள ZConnect ஆப் வாயிலாக பல்வேறு விபரங்களை அறிந்து கொள்ளவும் கட்டுப்படுத்தவும் உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயிலி வாயிலாக காரின் சார்ஜ் நிலை கண்காணிப்பு, கிடைக்கக்கூடிய வரம்பு மற்றும் சார்ஜிங் வரலாறு போன்றவற்றைக் கொண்டிருக்கும்.  இந்த செயலில் வழங்கப்பட உள்ள ரிமோட் வசதி மூலம் காரை முன்கூட்டியே குளிரூட்டுதல், ரிமோட் லாக் மற்றும் அன்லாக், விளக்குளை கட்டுப்படுத்துவது மற்றும் ஹார்ன் ஆக்டிவேஷன் போன்றவற்றை செயல்படுத்தலாம். மேலும், இருப்பிட அடிப்படையிலான சேவைகள் நேரடி இருப்பிட பகிர்வு, அருகிலுள்ள சார்ஜிங் நிலையம் அல்லது டாடா சேவை நிலையத்தைக் கண்டறிதல் மற்றும் ஆப் வழியாக தொழில்நுட்ப ஆதரவை ஏற்படுத்திக் கொள்ள வழி வகுக்கின்றது.

மேலும் இசட்கனெக்ட் ஆப் அடிப்படையிலான பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் எதிர்பாராமல் ஏற்படும் அவசர கால சமயத்தில் உடனடியாக அறிவிப்புகளை பெறுதல் மற்றும் தேவைப்படும்போது அவசரகால SOS செய்தி ஆகியவை அடங்கும். வாகன திருட்ப்பட்டால், இந்நிறுவன கால் சென்டர் வழியாக வாகனத்தை இயக்குவதனை தடுக்கும் (immobilisation) வசதியும் கிடைக்கிறது.

ZConnect பயன்பாட்டில் வாகனத்தின் திறன் மற்றும் பாதுகாப்பு அடிப்படையிலான அறிவித்தல்கள் இடம்பெறும். குறிப்பிட்ட எல்லையில் பயன்படுத்தும் வசதி, குறிப்பிட்ட நேரம் பயன்படுத்துதல் அதனை கடக்கும் போது அறவிப்புகள் பெறலாம். மேலும்  ஓட்டுநரின் இயக்குதல் திறனை அறிவது அதற்கேற்ப ஆலோசனை வழங்கும் வகையில் செயல்படும்.

நெக்ஸான் EV XM, நெக்ஸான் EV XZ மற்றும் நெக்ஸான் EV XZ+ LUX என மூன்று விதமான வேரியண்டுகள் இடம் பெற்றிருக்கின்றது. இந்த மாடலுக்கு அடிப்படையாகவே அனைத்திலும் பாதுகாப்பு சார்ந்த டூயல் ஏர்பேக், ஏபிஎஸ் இபிடி, ஐஎஸ்ஓ சைல்டு ஃபிக்ஸ் இருக்கைகள் இடம்பெற்றிருப்பதுடன் கூடுதலாக குளோபல் என்சிஏபி மையத்தால் சோதனை செய்யப்பட்ட நெக்ஸான் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்ற மாடலாகும்.

வாரண்டி, பேட்டரி பாதுகாப்பு

இந்த காரின் பேட்டரி பேக்கினை உயர் ரக ஸ்டீல் பேக்கில் பொருத்தப்பட்டிருக்கும் இந்த பேட்டரிக்கு IP67 சான்றிதழ் பெற்றிருக்கும். எனவே, தூசு மற்றும் நீரினால் எந்த பாதிப்பும் ஏற்படாது. டாடாவின் நெக்ஸான் எலக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரி மற்றும் மோட்டாருக்கு 8 ஆண்டு வாரண்டி அல்லது 1,60,000 கிமீ வழங்கப்பட உள்ளது. அடுத்தப்படியாக ஜிப்டிரான் ஈ.வி தொழில்நுட்பம், AiS-048 தரத்துக்கு இணையானது. ஆணி அல்லது கூர்மையானவை பேட்டரியில் ஊடுருவினாலோ, நசுக்குதல், தீ, அதிகப்படியான சார்ஜ், எலக்டரிக் ஷாக் மற்றும் ஷாட் தொடர்பானவையில் இருந்து மிக பாதுகாப்புடன் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வேரியண்ட் வசதிகள்

நெக்ஸான் EV XM வேரியண்டில் இரு விதமான டிரைவ் மோட் (டிரைவ் மற்றும் ஸ்போர்ட்ஸ்) வழங்கப்பட்டு, ஸ்டீல் வீல்கள், துணி இன்டிரியர், தானியங்கி காலநிலை கட்டுப்பாடு, கீலெஸ் என்ட்ரி மற்றும் புஷ்-பட்டன் ஸ்டார்ட் ஆகியவற்றை கொண்டுள்ளது.

நெக்ஸன் இ.வி. XZ+ டூயல் டோன் வெளிப்புற வண்ண விருப்பங்கள், 16 அங்குல டைமன்ட் கட் அலாய் வீல், ரிவர்ஸ் கேமராவுடன் 7.0 அங்குல டச்ஸ்கிரீன் அமைப்பு மற்றும் லேதர் சுற்றப்பட்ட ஸ்டீயரிங் ஆகியவற்றை கொண்டுள்ளது. டாப் வேரியண்டில் XZ + LUX  சன்ரூஃப், லீதெரெட் இருக்கைகள் மற்றும் ஆட்டோ வைப்பர் மற்றும் ஹெட்லைட்களுடன் வருகின்றது.

டாடா நெக்ஸான் இ.வி காரின் ரியல் ரேஞ்சு

ஜிப்ட்ரான் நுட்பத்தை பெற்ற முதல் நெக்ஸான் EV காரினை பொறுத்தவரை 312 கிமீ ரேஞ்சு சான்றிதழ் வழங்கப்பட்டாலும், நிகழ் நேரத்தில் ஓட்டுதல் சூழ்நிலை மற்றும் ஓட்டுநரின் செயல்பாட்டை பொறுத்து 200 கிமீ முதல் 250 கிமீ ரேஞ்சு வரை கிடைக்க வாய்ப்புள்ளது. ஸ்போர்ட் மோட் வாயிலாக அதிகபட்சமாக மணிக்கு 100-120 கிமீ வேகத்தை இலகுவாக எட்டும் என குறிப்பிடப்படுகின்றது.

ஜனவரி 28 ஆம் தேதி விலை அறிவிக்கப்பட உள்ள டாடா நெக்ஸான் EV விலை ரூ.15 முதல் ரூ.17 லட்சத்திற்குள் அமையலாம்.