டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டியாகோ.இவி மற்றும் நெக்ஸான்.இவி கார்களின் விலை ரூ.25,000 முதல் அதிகபட்சமாக ரூ.1.20 லட்சம் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், புதிதாக வெளியான டாடா பஞ்ச்.இவி விலையில் எந்த மாற்றமும் இல்லை.
சமீபத்தில் எம்ஜி மோட்டார் நிறுவன காமெட் மற்றும் ZS EV விலை குறைக்கப்பட்டதை தொடர்ந்து தற்பொழுது டாடாவும் விலையை குறைத்துள்ளது.
டாடா எலக்ட்ரிக் குறைக்கப்பட்ட ஆரம்ப விலை:
- டாடா Nexon.ev LR விலை ரூ.16.69 லட்சம்
- டாடா Nexon.ev MR விலை ரூ.14.49 லட்சம்
- டாடா Tiago.ev LR விலை ரூ.7.99 லட்சம்
TPEM இன் தலைமை வணிக அதிகாரி திரு.விவேக் ஸ்ரீவத்சா விலைக் குறைப்பு பற்றி பேசுகையில், “ EVயின் ஒட்டுமொத்த செலவில் பேட்டரி செலவுகள் கணிசமான பங்கைக் கொண்டுள்ளன. சமீப காலங்களில் பேட்டரி செல்களின் விலைகள் தணிந்திருப்பதாலும், எதிர்காலத்தில் அவற்றின் சாத்தியமான குறைப்பைக் கருத்தில் கொண்டும், இதன் விளைவாக வரும் பலன்களை வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக வழங்குவதற்கு விலை குறைப்பை அறிவித்துள்ளோம்.
இந்த விலை குறைப்பு ஏற்கனவே சந்தையில் சிறப்பான வரவேற்பினை பெற்ற Nexon.ev மற்றும் Tiago.ev ஆகியவை அதிக வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக இன்னும் அழுத்தமான முன்மொழிவாக மாறும் என்று நாங்கள் நம்புகிறோம் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.