இந்தியாவின் முன்னணி மோட்டார் வாகன தயாரிப்பாளராக விளங்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், இம்பேக்ட் டிசைன் அடிப்படையில் அறிமுகம் செய்திருந்த டாடா நெக்சான் எஸ்யூவி காரின் நெக்சான் ஏரோ கஸ்டமைஸ் பாடி கிட் விலை விபரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
டாடா நெக்சான் ஏரோ
2018 ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட டாடா நெக்சான் ஏரோ கான்செப்ட் மாடலை விரைவாக சந்தைக்கு அறிமுகம் செய்துள்ளது. எஞ்சின் மற்றும் மெக்கானிக்கல் அமைப்பில் எவ்விதமான மாற்றங்களும் இடம்பெறாமல் அமைந்திருக்கின்றது.
ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் கூடுதல் பவர் மற்றும் டார்க் பெற்ற எஸ்யூவிக்கு ஏற்ற வகையில் 1.2 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 108bhp பவருடன் 170Nm டார்க்கினை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரெவோடார்க் வரிசையில் இடம்பெற்றுள்ள 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 108 bhp பவருடன் 260 Nm டார்க்கினை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு எஞ்சினிலும் 6 வேக TA6300 சிங்க்ரோமெஸ் மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கின்றது. இதே எஞ்சினில் ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
ஏரோ எடிசனில் 5 விதமான பாடி கிட்டுகளை அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையிலான கஸ்டமைஸ் தேர்வுகளை கொண்டு நெக்சான் எஸ்யூவி மாடலை விரும்பும் வகையில் மாற்றியமைத்துக் கொள்ளலாம்.
XE/XM/XT/XZ மற்றும் XZ+ ஆகிய வேரியண்ட்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாடி கிட்டுகளின் ஆரம்ப விலை ரூ.30,610/- தொடங்கி அதிகபட்சமாக ரூ. 61,574/- விலையில் வெளியிடப்பட்டு கூடுதலாக லேபர் கட்டணம் ரூ.7000 + ஜிஎஸ்டி வரி மற்றும் மேற்கூறை ரேப் விலை கூடுதலாக ரூ.3500 + ஜிஎஸ்டி வரி ஆகும்.
பாடி கிட்டுகளில் XZ மற்றும் XZ+ ஆகிய வேரியன்டுகளுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ள ரூ. 61,574/- விலை கொண்ட ஏரோ கிட் லெவல் 3 ஆப்ஷன் 2யில் பாடி கிட், பனி விளக்கு கார்னிஷ், ஏரோ பேட்ஜ், ஏரோ சிட் கவர், ஏரோ கார்பெட், மிரர் கவர் சிவப்பு நிறத்தில் மற்றும் வீல் ரிம்பேன்டுகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலதிக விபரத்தை படத்தில் காணலாம்
image source – mycarhelpline