ஆகஸ்ட் 7ல் அறிமுகம் செய்யப்பட உள்ள டாடா மோட்டார்சின் புதிய கர்வ் கூபே மாடலில் இடம்பெற உள்ள புதிய 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மாடலுக்கு ஹைபர்ஐயன் என்ற பெயரை நிறுவனம் சூட்டியுள்ளது.
2023 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் முதன்முறையாக இந்த 1.2 லிட்டர் TGDi பெட்ரோல் எஞ்சின் ஆனது காட்சிப்படுத்தப்பட்டது. தற்பொழுது முதல் முறையாக இந்த எஞ்சின் கர்வ் மாடலில் இடம்பெற உள்ளது.
முழுமையான அலுமினியம் பாகங்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த இன்ஜினில் வேரியபிள் வால்வு டைமிங் , வேரியபிள் ஆயில் பம்ப் உடன் சிலிண்டர் ஹெட்டில் இணைக்கப்பட்ட எக்ஸாஸ்ட் மேனிஃபோல்டு உள்ளது.
இந்த எஞ்சின் ஏற்கனவே நெக்ஸானில் உள்ளதை விட 5 hp பவர் மற்றும் 55Nm டார்க் கூடுதலாக வெளிப்படுத்தும்.
எனவே புதிய Hyperion 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 125 hp பவரை 5,500RPMயிலும், 1700-3500RPM-ல் 225NM டார்க் வெளிப்படுத்தும். இதில் ஆறு வேகம் மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் ஆறு வேக டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் ஆனது பயன்படுத்தப்பட உள்ளது.
குறைந்த விலை மாடலில் ஏற்கனவே சந்தையில் இருக்கின்ற நெக்ஸான் மாடலின் 1.2 லிட்டர் எஞ்சினும், 1.5 லிட்டர் டீசல் என்ஜின் டாப் வேரியண்டுகளில் இந்த புதிய 1.2 லிட்டர் ஹைபர்ஐயன் என்ஜின் ஆனது பயன்படுத்தப்பட உள்ளது. ஆகஸ்ட் 7ஆம் தேதி டாடா கர்வ் மற்றும் கர்வ்.இவி என இரண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.