இந்தியாவின் காம்பேக்ட் எஸ்யூவி சந்தையில் முன்னணி மாடல்களில் ஒன்றான டாடாவின் நெக்ஸான் உற்பத்தி எண்ணிக்கை 6,00,000 இலக்கை வெற்றிகரமாக கடந்துள்ளது. தற்பொழுது ICE மற்றும் EV என இரண்டிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நெக்ஸான் எஸ்யூவி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 5 லட்சம் இலக்கை கடந்த நிலையில், அடுத்த ஒரு லட்சம் இலக்கை ஒரு வருடத்திற்குள் எட்டியுள்ளது. மேலும் 2023 ஆம் ஆண்டு இறுதி காலாண்டில் புதுப்பிக்ககப்பட்ட மாடல்கள் வெளியானது.
போட்டியாளரான பிரெஸ்ஸா, வெனியூ, சொனெட் மற்றும் எக்ஸ்யூவி 300, எக்ஸ்யூவி400 ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்ற நெக்ஸானில் 1.2 லிட்டர் பெட்ரோல் (120 PS/170 Nm) மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் (115 PS/260 Nm), EV பிரிவில் Medium Range (MR) வேரியண்டில் 30 KWh மற்றும் Long Range (LR) வகையில் 40.5kWh பேட்டரி என இருவிதமாக கிடைக்கின்றது.
போட்டியாளர்கள் ADAS பாதுகாப்பு தொகுப்பினை கொண்டிருந்தாலும் உறுதியான டாடாவின் கட்டுமானம் நெக்ஸான் வரவேற்பிற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக விளங்குகின்றது. தற்பொழுது நெக்ஸானின் ICE விலை ரூ.8.10 லட்சம் முதல் துவங்கி ரூ.14.74 லட்சம் வரை கிடைக்கின்றது. நெக்ஸான்.ev விலை ரூ.14.75 லட்சம் முதல் ரூ.19.95 லட்சம் வரை கிடைக்கின்றது.