பண்டிகை காலத்தை முன்னிட்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திஃ பிரசத்தி பெற்ற ‘Punch’ எஸ்யூவி மாடலில் கேமோ எடிசனை மற்ற மாடல்களை விட மாறுபட்ட நிறத்தில் கூடுதலான இன்டீரியர் மாறுபாடுடன் ரூ.15,000 வரை விலை அதிகரிக்கப்பட்டு ரூ.8.45 லட்சம் முதல் ரூ.10.15 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பச்சை நிறத்தில் (Seaweed Green) வெளியிடப்பட்டுள்ள மேற்கூரையில் வெள்ளை நிறத்தை பெற்று 16 அங்குல கிரே நிற அலாய் வீலும், இன்டீரியரில் முழுமையான கருப்பு உட்புறத்தை கொண்டு சீட் அப்ஹோல்ஸ்டரி மற்றும் டோர் பேட்களில் ‘கேமோ’ கிராபிக்ஸ் உள்ளது. மேலும் உட்புற கதவு கைப்பிடிகளும் கருப்பு நிறத்தில் உள்ளன.
பஞ்ச் 10.25-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஓட்டுநருக்கு செமி டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் ஆட்டோ ஏசி மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர். பாதுகாப்பு அம்சங்களில் இரட்டை முன்பக்க ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், பின்புற பார்க்கிங் கேமரா மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் உள்ளன.
Tata Punch Camo Edition Price list:
Tata Punch Camo Edition price | |
---|---|
Accomplished Plus | Rs 8.45 lakh |
Accomplished Plus AMT | Rs 9.05 lakh |
Accomplished Plus S | Rs 8.95 lakh |
Accomplished Plus S AMT | Rs 9.55 lakh |
Accomplished Plus CNG | Rs 9.55 lakh |
Accomplished Plus S CNG | Rs 10.05 lakh |
Creative Plus | Rs 9.15 lakh |
Creative Plus AMT | Rs 9.75 lakh |
Creative Plus S | Rs 9.60 lakh |
Creative Plus S AMT | Rs 10.15 lakh |
1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 3 சிலிண்டர் கொண்ட மாடல் அதிகபட்சமாக 86 hp பவர் மற்றும் 113 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக சிஎன்ஜி ஆப்ஷனில் 74PS பவர் வெளிப்படுத்துகின்றது.