டாடா மோட்டார்ஸ் எலக்ட்ரிக் கார் பிரிவில் உள்ள முந்தைய நெக்ஸான் இவி பிரைம் மற்றும் மேக்ஸ் மாடல்களுக்கு ரூ.2.60 லட்சம் வரை விலை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, டிகோர் மற்றும் டியாகோ இவி கார்களுக்கு ரூ.1.10 லட்சம் வரை வருட முடிவை ஒட்டி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
ICE பெற்ற மாடல்களுக்கு டாடா மோட்டார்ஸ் ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடியை அறிவித்துள்ளது.
Tata.ev Year End benefits
முந்தைய தலைமுறை 437 km ரேஞ்ச் வழங்குகின்ற நெக்ஸான் இவி மேக்ஸ் மாடலுக்கு ரூ.2.10 லட்சம் ரொக்க தள்ளுபடி மற்றும் 312 கிமீ ரேஞ்ச் வழங்குகின்ற நெக்ஸான் இவி பிரைம் காருக்கு ரூ.1.40 லட்சம் ரொக்க தள்ளுபடி வழங்கப்படுகின்றது. கூடுதலாக ரூ.50,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்து, டிகோர் இவி மாடலுக்கு 315 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்துகின்ற காருக்கு அனைத்து வகைகளிலும் ரூ. 50,000 எக்ஸ்சேஞ்ச் போனஸுடன் ரூ.50,000 ரொக்க தள்ளுபடியைப் பெறலாம். 10,000 வரையிலான கார்ப்பரேட் பலன்களும் ஒட்டு மொத்தமாக ரூ.1.10 லட்சம் வரை தள்ளுபடி பெறலாம்.
அடுத்து, டியாகோ இவி காருக்கு ரூ.77,000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள சலுகைகள் 31-12-2023 வரை மட்டுமே வழங்கப்படும். டீலர்கள், வேரியண்ட் அடிப்படையில் மாறக்கூடும். மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள அருகாமையில் உள்ள டாடா மோட்டார்ஸ் டீலரை அனுகலாம்.