இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஸ்போர்டிவ் கார்களுக்கு என பிரத்தியேகமாக அறிமுகம் செய்த டாமோ ரேஸ் பிராண்டின் முதல் மாடலான ரேஸ்மோ கார் திட்டத்தை தற்காலிமாக கைவிட்டுள்ளது. ரேஸ்மோ காருக்கு மேற்கொண்ட ரூ. 250 முதலீட்டை வர்த்தக வாகன பிரிவுக்கு மாற்றியுள்ளது.
ரேஸ்மோ கார்
கடந்த ஆண்டு மத்தியில் ஆட்டோகார் இணையதளம் வெளியிட்டிருந்த ரேஸ்மோ கார் வருகை தொடர்பான தகவலை தொடர்ந்து, அதிகார்வப்பூர்வமாக ரேஸ்மோ கார் தயாரிக்கும் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக டாடா மோட்டார்சின் நிதி அலுவலர் பாலாஜி உறுதிப்படுத்தியுள்ளார். ரேஸ்மோ காருக்கு என ஒதுக்கப்பட்ட ரூ.205 கோடி முதலீட்டை டாடா மோட்டார்சின் வர்த்தக வாகன பிரிவுக்கு மாற்றியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் கிட் கார் என்ற பெருமைக்குரிய ரேஸ்மோ கார் முதன்முறையாக 2017 ஜெனிவா மோட்டார் ஷோ அரங்கில் டாடா நிறுவனம் அறிமுகம் செய்தது. 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு 186 bhp பவருடன் மற்றும் 210 Nm டார்க் வெளிப்படுத்தி 6 வேக ஏஎம்டி கியர்பாக்சினை பெற்றுள்ளது. 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டிவதற்கு வெறும் 6 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும்.
நான்கு மீட்டருக்கு குறைந்த நீளத்தை கொண்ட அதாவது 3885மிமீ நீளமும் , 1810மிமீ அகலமும் , 1208மிமீ உயரத்தினை பெற்றுள்ள இந்த காரின் வீல்பேஸ் 2430 மிமீ மற்றும் கிரவுண்ட் கிளியரண்ஸ் 160மிமீ ஆகும். ரேஸ்மோ காரானது டாமோ பிராண்டின் மோஃபிளக்ஸ் ( MOFlex multi0material sandwich structure ) பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்ட காராகும்.
மேலே உயர்ந்த திறக்கும் பறக்கும் றெக்கை போன்ற அமைந்த கதவுகளை பெற்றதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த காரின் முன்புறத்தில் 205/50 R17 ட்யூப்லெஸ் ரேடியல் டயர் மற்றும் பின்புறத்தில் 235/45 R18 ட்யூப்லெஸ் ரேடியல் டயரும் இணைக்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து டாமோ பிராண்டு கார்களுக்கு என உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக கனக்டேட் கார் நுட்பத்தினை பெற்றதாக விளங்கும். இதன் வாயிலாக ரேஸ்மோ காரில் நேவிகேஷன் , வாகனத்தின் இருப்பிடம் சார்ந்த தகவல்கள் உள்பட பல்வேறு விதமான வசதிகளை வாடிக்கையாளர்கள் பெற இயலும்.
தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் ரேஸ்மோ ஸ்போர்ட்டிவ் கார் வருகை அடுத்த ஆண்டின் மத்தியில் எதிர்பார்க்கலாம் என கூறப்படுகின்றது.