Categories: Car News

டாடா ஹாரியர் கேமோ எடிஷன் விற்பனைக்கு வெளியானது

4565f tata harrier camo edition

விற்பனையில் உள்ள டாடா ஹாரியர் எஸ்யூவி காரின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள கேமோ எடிஷன் மாடல் ரூ.16.50 லட்சம் முதல் துவங்குகின்றது. மற்ற சாதாரன வேரியண்ட்டை விட ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை விலை கூடுதலாக அமைந்துள்ளது.

ஃபியட் நிறுவனத்தின் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் பிஎஸ்6 முறைக்கு மாற்றப்பட்டு 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை பெற்றிருக்கின்றது. இந்த வாகனத்தின் பவர் 170 பிஹெச்பி மற்றும் டார்க் 350 என்எம் வெளிப்படுத்துகின்றது.

தோற்ற அமைப்பில் மட்டும் மாறுதல்களை பெற்றுள்ள கேமோ எடிசனில் பச்சை நிறத்தில் வழங்கப்பட்டு, பல்வேறு இடங்களில் க்ரோம் பாகங்கள், கருமை நிறம் பெற்ற அலாய் வீல் இணைக்கப்பட்டுள்ளது. சிறப்பு கேமோ ஸ்டிக்கரிங் மேற்கூறை, பானெட் மற்றும் டோரில் வழங்கப்பட்டு Harrier பேட்ஜ் முன்புற பானெட்டில் உள்ளது.

இன்டிரியரில் கருமை நிற தீம் இணைக்கப்பட்டு, கேமோ க்ரீன் ஸ்டிச்சிங், Blackstone Matrix’ ஃபாக்ஸ் வுட், OMEGARC ஸ்க்ஃப் பிளேட் உள்ளது.

டாடா ஹாரியர் கேமோ எடிஷன் விலை

XT MT – ரூ. 16.50 லட்சம்

XT+ MT – ரூ. 17.30 லட்சம்

XZ MT – ரூ. 17.85 லட்சம்

XZ+ MT – ரூ. 19.10 லட்சம்

XZA – ரூ. 19.15 லட்சம்

XZA+ – ரூ. 20.30 லட்சம்

(எக்ஸ்ஷோரூம் டெல்லி)

web title : Tata Harrier Camo Edition Launched