
டாடா மோட்டார்சின் கூபே ஸ்டைல் கர்வ் காரில் EV, ICE என இரண்டிலும் விற்பனைக்கு கிடைக்கின்ற நிலையில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என இரு எஞ்சினிலும் சில வாரங்களுக்குள் கிடைக்க துவங்க உள்ளது.
125hp, 225Nm டார்க் வெளிப்படுத்தும் பெட்ரோல் மற்றும் 118hp, 260Nm டார்க் வெளிப்படுத்தும் டீசல் எஞ்சின் ஆனது 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக டூயல் கிளட்ச் கியர்பாக்ஸ் பெற்றிருக்கும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்பொழுது விற்பனையில் கிடைக்கின்ற Accomplished வேரியண்டின் அடிப்படையில் முழுமையான கருப்பு நிறத்தை பெற்ற எக்ஸ்டீரியர் மற்றும் சில இடங்களில் சிவப்பு நிற இன்ஷர்ட்டுகளை பெற்றிருக்கலாம்.
இன்டீரியரில், தற்பொழுது நெக்ஸான் உள்ளிட்ட மாடல்களில் கிடைக்கின்ற பிளாக் எடிசன் போல முழுமையான கருமை நிறத்துடன் 12.3 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் 9 ஆடியோ ஸ்பீக்கர் சிஸ்டத்துடன் #DARK பேட்ஜிங் இருக்கையில் பெற்றிருக்கலாம்.
இந்த மாடலுக்க போட்டியாக சந்தையில் கிடைக்கின்ற கூபே ஸ்டைல் மிட் எஸ்யூவி சிட்ரோன் பாசால்ட் பிளாக் எடிசனும் போட்டியாக வரவுள்ள நிலையில் மற்ற மிட்சைஸ் மாடல்களும் கிடைக்கின்றன.
தற்பொழுது ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இறுதி ஐபிஎல் போட்டியில் கர்வ் பிளாக் விற்பனைக்கு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.