நடுத்தர எஸ்யூவி சந்தையில் கூபே ஸ்டைல் பெற்ற மாடலாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள டாடா மோட்டார்சின் கர்வ் ICE மாடலில் இடம் பெற உள்ள 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் என்ஜினை பற்றி அறிந்து கொள்ளலாம்.
40.5kwh மற்றும் 55kwh பேட்டரி ஆப்ஷனைப் பொறுத்தவரை இரண்டு விதமான பேட்டரிகளை பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
Tata Curvv and Curvv.ev
ICE வரிசையில் இடம் பெறுகின்ற மூன்று எஞ்சினிலும் Eco, City மற்றும் Sports என மூன்று விதமான டிரைவ் மோடுகள் ஆனது பெற உள்ளது. மூன்று எஞ்சினிலும் டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் இடம் பெற்று இருக்கும்.
புதிதாக ஒரு 1.2 லிட்டர் டர்போ GDI எஞ்சின் ஆனது கொண்டு வருகின்றது. இந்த மாடலுக்கு அந்த மாடலின் பவர் விபரங்கள் தற்பொழுது வெளியாகவில்லை. இது தவிர ஏற்கனவே நெக்சானில் இடம் பெற்றிருக்கின்ற 1.5 லிட்டர் டீசல் இன்ஜினை இந்த மாடலும் பகிர்ந்து கொள்கின்றது.
கர்வ்.ev 55kWh பேட்டரி பெற்று முழுமையாக சிங்கிள் சார்ஜில் 550-600 கிலோமீட்டர் வரை வெளிப்படுத்தும். இருப்பினும், குறைந்த விலை 40.5kWh பேட்டரியின் ARAI சான்றிதழ் படி 465 கிலோமீட்டர் ரேஞ்ச் வெளிப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
முன்புற ஆக்ஸ்லில் பொருத்தப்பட்டுள்ள மோட்டார் வெளிப்படுத்தக் கூடிய பவர் மற்றும் டார்க் தொடர்பான எந்த விபரங்களும் தற்பொழுது வெளியாகவில்லை.
மற்ற முக்கிய அம்சங்கள்
கர்வ் மற்றும் கர்வ்.ev என இரண்டிலும் இடம்பெற உள்ள முக்கிய வசதிகளில் 12.3 அங்குல தொடுதிரை கிளஸ்ட்டரில் கனெக்டிவ் சார்ந்த வசதிகள், கெஸ்டர் மூலம் இயங்கும் வகையிலான டெயில்கேட், காற்றோட்டமான இருக்கைகள், லெவல்2 ADAS பாதுகாப்பு தொகுப்பு, 6 ஏர்பேக்குகள், காற்று சுத்திகரிப்பான், நேரடி TPMS, லேன் கீப் அசிஸ்ட், லேன் புறப்படும் எச்சரிக்கை, முன்னோக்கி மற்றும் பின்புற மோதல் எச்சரிக்கை உள்ளிட்ட வசதிகளுடன் கர்வ்.இவி மாடலுக்கான V2L மற்றும் V2V வசதியும் உள்ளது.
18 அங்குல அலாய் வீல், அனைத்து சக்கரங்களில் டிஸ்க் பிரேக் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.
சிட்ரோயன் பஸால்ட் கூபே எஸ்யூவி மாடலுக்கு கடும் சவாலினை ஏற்படுத்தும் வகையில் ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர் மற்றும் ஹோண்டா எலிவேட் ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது.
கர்வ்.இவி மாடலுக்கு போட்டியாக எம்ஜி ZS EV, மற்றும் வரவிருக்கும் ஹூண்டாய் க்ரெட்டா EV, மாருதி eVX ஆகியவற்றையும் எதிர்கொள்ள உள்ளது.