டாடா மோட்டார்சின் பிரீமியம் அவின்யா எலக்ட்ரிக் கான்செப்ட் காரினை விற்பனைக்கு 2025 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்ய உள்ள இந்த காருக்கான EMA (Electrified Modular Architecture) பிளாட்ஃபாரத்தை ஜாகுவார் லேண்ட் ரோவரிடம் இருந்து பெற உள்ளதை உறுதி செய்துள்ளது.
டாடா பயணிகள் எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட் (டாடா மின்சார வாகனப் பிரிவு) மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவர் ஆகியவை JLR இன் எலக்ட்ரிஃபைட் மாடுலர் ஆர்கிடெக்சர் (EMA) தளத்திற்கு ராயல்டி கட்டணத்திற்கு (பேட்டரி, எலக்ட்ரிக்கல் டிரைவ் உட்பட) உரிமம் வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்தாகியுள்ளது.
Tata Avinya.ev
முற்றிலும் பிரீமியம் வசதிகளை பெற்ற எலக்ட்ரிக் காராக வரவுள்ள அவின்யா காருக்கான பிளாட்ஃபாரத்தை ஜாகுவாரிடம் பெற உள்ளதால், இந்த பிளாட்ஃபாரத்தின் மூலம் மிக நவீனத்துவமான வசதிகள் மற்றும் உயர்தரமான கட்டுமானத்தை கொண்டிருக்கும் என்பதனால் சிறப்பான பாதுகாப்புடன் லெவல்-2 ADAS நுட்பத்தை கொண்டிருக்கும்.
550 கிமீ ரேஞ்ச் அல்லது அதற்கு கூடுதலாக வழங்கும் வகையில் உள்ள அவின்யா மாடலில் 80 kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டிருக்கும். மேலும், EMA பிளாட்ஃபாரம் மிக விரைவான அல்ட்ரா டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் முறையில் 150 kW முதல் 300 kW வரை ஆதரிக்கும் என்பதனால், இந்த மாடல் 150 kW வரையிலான விரைவு சார்ஜரை பெறலாம்.
தற்பொழுது டாடா மோட்டார்ஸ் GEN 1 அடிப்படையிலான பேட்டரி வாகனங்களை விற்பனை செய்து வரும் நிலையில், GEN 2 அடிப்படையில் ஹாரியர்.இவி மற்றும் கர்வ் எலக்ட்ரிக் கூபே எஸ்யூவி 2024 ஆம் ஆண்டில் வரவுள்ளது.
JLR நிறுவனத்தின் முதல் EMA அடிப்படையிலான EV ஆனது லேண்ட் ரோவர் எஸ்யூவி மற்றும் ஜாகுவார் நான்கு கதவு GT மாடலும் 2024 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது. டாடா பயன்படுத்திக் கொள்ள உள்ள EMA மூலம் முதல் பீரீமியம் எலக்ட்ரிக் அவின்யா 2025-ல் வரவுள்ளது.